கோவை: சிங்காநல்லுார், தெற்கு வெள்ளாளர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம், 54; டிரைவர். இவரது மனைவி ஆறு மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் மனஅழுத்தத்துக்கு உள்ளானவர், மது பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் மது அருந்தி வந்தவர், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு டாடாபாத், 100 அடி ரோட்டில் நடந்து சென்றபோது, மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பான்மசாலா விற்றவர்கள் கைதுகோவை: பெரியகடைவீதி, ஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு, உக்கடம், ரத்தினபுரி, சரவணம்பட்டி போலீசார், நேற்று முன்தினம் கடைகளில் சோதனையிட்டு, தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்த, 14 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஹான்ஸ் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகளை, பறிமுதல் செய்தனர்.மது விற்றவர்கள் கைதுகோவை: மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் மாநகர போலீசார், நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளில் ரோந்து சென்றனர். அச்சமயம் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஏழு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பஸ் மோதி முதியவர் பலிமதுக்கரை: மதுக்கரையை அடுத்த வாளையார் எல்லை பகுதியில் நேற்று முன்தினம் முதியவர் ஒருவர், சாலையில் நடந்து சென்றார். கேரளாவிலிருந்து வந்த தனியார் பஸ், முதியவர் மீது மோதியது. படுகாயமடைந்தவர் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். க.க.சாவடி போலீசார் விசாரணையில், அவர் சுப்ரமணி, 85, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர், பாலக்காடு செல்ல வந்தது தெரிந்தது. பஸ் டிரைவர் கஞ்சிக்கோடு ரஞ்சித்திடம் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE