பொது செய்தி

தமிழ்நாடு

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் அருட்கொடையாளர் தின விழா

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:தமிழகம் முழுக்க முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்காக காப்பகங்கள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரம குருஜி சிவாத்மா கூறினார்.கருமத்தம்பட்டி அடுத்த நல்லகவுண்டன்பாளையத்தில், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் செயல்படுகிறது. இங்கு ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் காப்பகங்கள் உள்ளன. 350க்கும் மேற்பட்டோர்

கருமத்தம்பட்டி:தமிழகம் முழுக்க முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்காக காப்பகங்கள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரம குருஜி சிவாத்மா கூறினார்.கருமத்தம்பட்டி அடுத்த நல்லகவுண்டன்பாளையத்தில், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் செயல்படுகிறது. இங்கு ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் காப்பகங்கள் உள்ளன. 350க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்படுகின்றனர்.சேவாஸ்ரமத்தின், 21வது ஆண்டு விழா மற்றும் அருட்கொடையாளர் தினவிழா நடந்தது. ஆசிரமத்தின் குருஜி சிவாத்மா பேசுகையில், " தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க ஆதரவற்றோர் இல்லாத நிலையை உருவாக்க, சேவாஸ்ரமம் செயல்பட்டு வருகிறது. மேலும் பல பகுதிகளில், ஆதரவற்றோர், முதியோருக்காக இலவச காப்பகங்களை துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.தொடர்ந்து, விருந்தினர்கள் கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X