பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி வரும் பழநி பிரசாதம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை:விரைவு அஞ்சல் மூலம் வீட்டிலிருந்தபடி, பழநி பிரசாதம் பெற, அருகிலுள்ள தபால் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம் என, கோவை தபால்துறை தெரிவித்துள்ளது.தபால்துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறை ஒப்பந்தப்படி, இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தபால்நிலையங்களில், பழநி பிரசாதத்திற்கு, 675 முன்பதிவு பெறப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு தபால்நிலையங்களில்,

கோவை:விரைவு அஞ்சல் மூலம் வீட்டிலிருந்தபடி, பழநி பிரசாதம் பெற, அருகிலுள்ள தபால் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம் என, கோவை தபால்துறை தெரிவித்துள்ளது.தபால்துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறை ஒப்பந்தப்படி, இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தபால்நிலையங்களில், பழநி பிரசாதத்திற்கு, 675 முன்பதிவு பெறப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு தபால்நிலையங்களில், முன்பதிவு நடந்து வருகிறது. அருகிலுள்ள எந்த தபால்நிலையத்திலும், 250 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.விரைவு அஞ்சல் மூலம், அரை கிலோ பஞ்சாமிர்தம், முருகனின் ராஜ அலங்கார புகைப்படம், விபூதி பிரசாதம் ஆகியவை வழங்கப்படும். www.tnhrge.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி, ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம் என, தபால்துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X