பணியில் மெத்தனம்பூ மார்க்கெட், வி.சி.வி. ரோட்டில், துாய்மை பணியாளர்கள், சாக்கடையில் இருந்து அகற்றிய குப்பையை, சாலையில் குவித்துச் சென்றுள்ளனர். இவை மீண்டும் காற்றில் சாக்கடைக்குள் விழுந்து, அடைப்பு ஏற்படுகிறது.- குருசாமி, வி.சி.வி. ரோடு.
மின் கம்பத்தை சீராக்கணும்சரவணம்பட்டி, விசுவாசபுரம், செந்தில் நகர் பிரதான சாலையில் உள்ள, மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இக்கம்பத்தை சீராக அமைக்க வேண்டும்.- பச்சையப்பன், செந்தில் நகர்.
குப்பை அள்ளுவதில்லைமாநகராட்சி, 56வது வார்டுக்கு உட்பட்ட, சவுரிபாளையம், கருணாநிதி நகரில் குப்பை தொட்டி நிரம்பி, இதன் அருகிலேயே சாலையில் குப்பை கொட்டப்படுகிறது.- வெள்ளிங்கிரி, கருணாநிதி.
பயனற்ற கிணறுமாநகராட்சி, 95வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார், காந்தி ரோடு, பாரதி நகர் முதல் வீதியில் உள்ள பாழடைந்த கிணறில், குப்பை கொட்டப்படுகிறது. ஆபத்தான இக்கிணறை மூட வேண்டும்.- அருண்குமார், பாரதி நகர்.
குப்பையானது விலையில்லா சைக்கிள்கள்கோவை நேரு ஸ்டேடியம், வ.உ.சி., பூங்காவில், முன்னாள் முதல்வர் ஜெ., வழங்கிய பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்கள், குப்பையோடு குப்பையாக போடப்பட்டுள்ளன.- சரவணன், காட்டூர்.
சுகாதார சீர்கேடுகுனியமுத்துார், அரசு குடியிருப்போர் காலனியில் உள்ள, காலியிடத்தில், கழிவுநீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் குப்பை குவிக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-சதீஷ், குனியமுத்துார்.
விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, மதுக்கரை மார்க்கெட் ரோடு - சுந்தராபுரம், பிள்ளையார் புரம் திருப்பம் அருகில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 15) கடந்த இரு மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- சிவா, மதுக்கரை மார்க்கெட் ரோடு.
பலி வாங்க காத்திருக்கும் கிணறுதொண்டாமுத்துார் பேரூராட்சி, கெம்பனுாரில் உள்ள, சிறுவர் பூங்காவில், திறந்த நிலையில் கிணறு உள்ளது. அருகில் விளையாடும் சிறுவர்கள், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் முன், இக்கிணறுக்கு மூடி அமைக்க வேண்டும்.- பாபு, கெம்பனுார்.
சாக்கடை கால்வாயை சீரமைக்கணும்டவுன்ஹால், வைசியாள் வீதி, ரங்கே கவுடர் வீதியில் சாக்கடை கால்வாய் சிதிலமடைந்துள்ளது. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும்.- குணா, ரங்கே கவுடர் வீதி.
சாக்கடை சிலாப்பை மாற்றணும்மருதமலை ரோடு, நவாவூர் பிரிவில், சிதிலமடைந்துள்ள, சாக்கடை கால்வாய் சிலாப்பை மாற்றணும்.- விஜயகுமார், நவாவூர் பிரிவு.
சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 63வது வார்டுக்கு உட்பட்ட, சென்ட்ரல் ஸ்டுடியோ ரோடு, தனலட்சுமிபுரம், ரேஷன் கடை அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- வேலுமணி, தனலட்சுமி புரம்.
சாக்கடை கால்வாய் சிலாப் அமைக்கணும்பீளமேடு, மணியம்பாபு சாமி வீதியில், சாக்கடை கால்வாய் சிலாப்கள் சிதிலமடைந்துள்ளன. பாதசாரிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இப்பகுதியில், சிலாப்களை அமைக்க வேண்டும்.- ரம்யா, மணியம்பாபு சாமி வீதி.
சாக்கடை கால்வாயை துார் வாரணும்மாநகராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட, பி.என்.புதுார், முல்லை நகர் முதல் வீதியில், சாக்கடை கால்வாய் முழுவதும் செடி வளர்ந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. இக்கால்வாயை, துார்வார வேண்டும்.- ராஜப்பா, முல்லை நகர்.
குழாய் உடைப்பு; தண்ணீர் வீண்வேலாண்டிபாளையம், ஆதித்யா அவென்யூவில், குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- உமாசங்கர், வேலாண்டிபாளையம்.
சாலை படுமோசம்மேட்டுப்பாளையம் ரோடு, முருகன் நகர் - ஹரி கார்டன் செல்லும் பிரதான சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- ஜெயசந்திரன், தொப்பம்பட்டி..
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE