சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை:சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கோவை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை கலெக்டர் அலுவலகம் முன் இவர்கள், இரண்டாம் நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை

கோவை:சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கோவை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை கலெக்டர் அலுவலகம் முன் இவர்கள், இரண்டாம் நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை முதல் கோரிக்கையை வலியுறுத்தி, கோஷம் எழுப்பியபடி அமர்ந்திருந்த அங்கன்வாடி ஊழியர்கள், கும்மி அடித்தும், ஒப்பாரி வைத்தும், அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நேற்று இரவு வரை, இவர்களது போராட்டம் நீடித்தது.சத்துணவு ஊழியர்களும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில், 135 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X