பொது செய்தி

தமிழ்நாடு

வரலாறு பாடத்திற்கு கூடுதல் தேவை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை: வரலாறு பாடத்திற்கு, பட்டதாரி ஆசிரியரில் இருந்து, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த 13ம் தேதி நடந்தது. ஜன.,1ம் தேதி நிலவரப்படி, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப காலியிடங்கள் கணக்கிடப்பட்டு, இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கலந்தாய்வுக்கு பிறகும், காலியிடங்கள் இருப்பதால், சீனியாரிட்டி பட்டியலில் அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள், கருணை

கோவை: வரலாறு பாடத்திற்கு, பட்டதாரி ஆசிரியரில் இருந்து, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த 13ம் தேதி நடந்தது. ஜன.,1ம் தேதி நிலவரப்படி, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப காலியிடங்கள் கணக்கிடப்பட்டு, இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கலந்தாய்வுக்கு பிறகும், காலியிடங்கள் இருப்பதால், சீனியாரிட்டி பட்டியலில் அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள், கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தோர், துறை மாறுதல் மூலம் பணியில் சேர்ந்தவர்களில், பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் முடித்தவர்களின் பட்டியலை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்.மாவட்ட திறனாய்வு போட்டிகோவை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின், தனித்திறன் வளர்க்கும் வகையில், திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, நாளை (பிப்., 25), ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட திறனாய்வு போட்டிகள் நடக்கின்றன. நவீன கால கல்வியின் போக்கும் தொலைநோக்கு பார்வையும், பல்லுாடக பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.நாட்டு நலப்பணியில் மாணவர்கள்கோவை: ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், மாணவர்கள் மருதமலை கோவில் மலைப்பகுதி மற்றும் அடிவாரத்தில் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் சரவண பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தாமரை வரைந்து வரவேற்புகோவை: கோவையில், நாளை நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி வருகிறார். பிரதமரை வரவேற்கும் வகையில், வடவள்ளி மண்டல பா.ஜ., சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் மருதமலை அடிவாரம் வரையில் உள்ள மருதமலை சாலையில், தாமரை சின்னம் வரைந்து, அதில், 'மோடி ஜி வருக வருக' என, எழுதியுள்ளனர்.தொடரும் ஸ்டிரைக்கோவை: பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள், ஏழாம் நாளாக நேற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தாலுகா அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.குடியேறும் போராட்டம் கோவை: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்கம் சார்பில், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலகத்தில், குடியேறும் போராட்டம் நேற்று நடந்தது. அவர்களை, அலுவலர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X