கோவை:மேட்டுப்பாளையத்தில் பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பிற மதத்தினர் குறித்து அவதுாறாக பேசியதாக, அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து, சிங்காநல்லுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கலவரம் துாண்டும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் ஜெய்சங்கர்,42,கைது செய்யப்பட்டார்.ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சக்திவேல், நிபந்தனை ஜாமினில் ஜெய்சங்கரை விடுவித்து, நேற்று உத்தரவிட்டார்.'இனிமேல் இரு பிரிவினர் இடையே கலவரம் துாண்டும் வகையில் பேச மாட்டேன்' என்று ஜெய்சங்கர் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யவும், சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் காலை மற்றும் மாலையில், கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE