கோவை:பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல் செய்யக்கோரி, மார்ச் 7ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த, பிராமணர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.அகில பாரத பிராமணர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம், தேசிய பொதுச்செயலாளர் ராமசுந்தரம் முன்னிலையில் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கட்ரமணி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு அமல் செய்யக்கோரி மார்ச் 7 காலை 9:00 மணிக்கு, கோவை பவர் ஹவுஸ் எதிரில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அன்று காலை 11:00 மணிக்கு, கோவை மாவட்ட பேரவை கூட்டத்தை, ராம்நகர் ராமர் கோவில் வீதி எஸ்.என்.வி., கல்யாண மண்டபத்தில் நடத்தவும், முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE