பொது செய்தி

தமிழ்நாடு

நம் மாநில கடன் ரூ.4.85 லட்சம் கோடி!

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை : தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ்., நேற்று, 2021 - 22ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்படி, தமிழக அரசின் கடன், 4.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; அடுத்த ஆண்டு, இந்த கடன், 5.70 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை, 41 ஆயிரத்து, 417 கோடி ரூபாயாக உள்ளது.தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நேற்று சட்டசபையில், 2021 - 22ம்
நம் மாநில கடன் ,  ரூ.4.85 லட்சம், கோடி!

சென்னை : தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ்., நேற்று, 2021 - 22ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்படி, தமிழக அரசின் கடன், 4.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; அடுத்த ஆண்டு, இந்த கடன், 5.70 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை, 41 ஆயிரத்து, 417 கோடி ரூபாயாக உள்ளது.

தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நேற்று சட்டசபையில், 2021 - 22ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இருந்து தான், சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி வசூல் அதிகரிக்க துவங்கியது.


latest tamil news

வரியில்லாத வருவாய்முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்களின் வசூல், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. எனினும், மோட்டார் வாகன வரி வசூல், இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
நடப்பாண்டின் திருத்த மதிப்பீடுகளில், ஒட்டு மொத்தமாக, மாநில அரசின் சொந்த வரி வருவாய், 1.09 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இது, கடந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டதை விட, 17.64 சதவீதம் குறைவு.செலவினங்கள்அதேபோல, கடந்த பட்ஜெட்டில், 15 ஆயிரத்து, 899 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட, வரியல்லாத வருவாயும், திருத்திய மதிப்பீடுகளில், 12 ஆயிரத்து, 629 கோடி ரூபாயாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா காரணமாக, சுகாதாரம் மற்றும் நிவாரண பணிகளுக்கு, 12 ஆயிரத்து, 918 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. செலவினங்களை கட்டுப்படுத்த, அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, 13 ஆயிரத்து, 250 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

வருவாய் வரவினங்களில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் அதிகரித்த செலவு காரணமாக, 2020 - 21ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை, 65 ஆயிரத்து, 994 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட, 21 ஆயிரத்து, 617 கோடி ரூபாயை விட மிகவும் அதிகம்.கொரோனா தொற்றால் வருவாய் குறைந்துள்ளது. மக்கள் நலனை பாதுகாக்க, செலவினங்கள் அதிகரிக்கப்பட்டன. எனவே, அரசு கடன்கள் பெறுவதை தவிர்க்க இயலாது. இதனால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்.நடப்பாண்டில் கணிசமாக குறைந்திருந்த, வருவாய் வரவினங்கள் மீண்டெழும் என, 2021 - 22ம் ஆண்டின், இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.


பற்றாக்குறைஇடைக்கால பட்ஜெட்டில், மொத்த வருவாய் வரவினம், இரண்டு லட்சத்து, 18 ஆயிரத்து, 99 கோடியே, 96 லட்சம் ரூபாயாக இருக்கும். செலவினங்கள், இரண்டு லட்சத்து, 60 ஆயிரத்து, 409 கோடியே, 26 லட்சம் ரூபாயாக இருக்கும். இதன் அடிப்படையில், 2021 - 22ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை, 41 ஆயிரத்த, 417 கோடியே, 30 லட்சம் ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி பற்றாக்குறை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.94 சதவீதம். அடுத்த மாதம், 31ம் தேதி, மாநிலத்தின் ஒட்டு மொத்த கடன், 4.85 லட்சம் கோடி ரூபாயாகவும்; 2022 மார்ச், 31ல், 5.70 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு, பட்ஜெட் உரையில் ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.வருவாய் பற்றாக்குறை, கடன் தொடர்ந்து அதிகரிப்பு
அ.தி.மு.க., அரசு தொடர்ந்து, ஒன்பதாவது முறையாக, பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. கடந்த, 2014 - 15ம் நிதியாண்டில், தமிழகத்தில், 6,407 கோடி ரூபாய், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அடுத்த நிதியாண்டில், இது, 9,481 கோடி ரூபாயாக அதிகரித்தது.

பின், 2016 இடைக்கால பட்ஜெட்டில், 9,154 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஜூன் மாதம் தாக்கலான பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 15 ஆயிரத்து, 854 கோடி ரூபாயாக இருந்தது.

இதையடுத்து, 2017 பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 15 ஆயிரத்து, 930 கோடி; 2018 பட்ஜெட்டில், 17 ஆயிரத்து, 490.58 கோடி; 2019 பட்ஜெட்டில், 14 ஆயிரத்து, 314 கோடி ரூபாயாக இருந்தது. 2019ல் திருத்திய மதிப்பீட்டில், பற்றாக்குறை, 25 ஆயிரத்து, 71 கோடி ரூபாயாக அதிகரித்தது.

கடந்த ஆண்டு தாக்கல் செய்த, 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 21 ஆயிரத்து, 617 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 41 ஆயிரத்து, 417 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


கடன் சுமை

கடன் சுமையும் அதிகரித்தபடி உள்ளது. 2017 - 18 பட்ஜெட்டில், 3.14 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், 2018 - 19ம் ஆண்டு பட்ஜெட்டில், 3.55 லட்சம் கோடியாக உயர்ந்தது. பின், 2019 - 20ல், 3.97 லட்சம் கோடியாகியது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 4.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் சுமை, தற்போது, 4.85 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், 31ல், 5.70 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சட்டசபையில் இருந்து, நேற்று எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.சட்டசபை கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கியது. காலை, 10:57க்கு, முதல்வரும், துணை முதல்வரும் பட்ஜெட் உரையுடன் சபைக்கு வந்தனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்; எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சபைக்கு வரவில்லை.

கூட்டம் துவங்கியதும், எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேச வாய்ப்பு தரும்படி கேட்டார். சபாநாயகர் அனுமதி தரவில்லை. பட்ஜெட்டை தாக்கல் செய்யும்படி, துணை முதல்வருக்கு உத்தரவிட்டார். அவரும் எழுந்து பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கினார்.துரைமுருகன், பேச வாய்ப்பு தரும்படி தொடர்ந்து கேட்க, சபாநாயகர் தரவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, 'இடைக்கால பட்ஜெட், கருப்பு பட்ஜெட்' என, கோஷம் எழுப்பினர்.துரைமுருகன் எழுதி வைத்திருந்ததை எடுத்து படித்தார். பின், சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.க.,வில் இருந்து பா.ஜ.,விற்கு சென்ற, தி.மு.க., - எம்.எல்.ஏ., - கு.க.செல்வமும், சபையிலிருந்து வெளியேறினார். காலை, 11:05க்கு பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பகல், 1:33க்கு நிறைவு செய்தார். அவருக்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பட்ஜெட் தாக்கல் செய்த பின், கூட்டம் நிறைவடைந்தது. இன்று சட்டசபை கூட்டம் கிடையாது. நாளை காலை, 10:00 மணிக்கு, சட்டசபை கூடும் என, சபாநாயகர் தனபால் அறிவித்தார்.


கூட்டத்தொடர் முழுதும் புறக்கணிப்புபட்ஜெட் கூட்டத் தொடரை, முழுமையாக புறக்கணிப்பதாக, எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. எதிர்கட்சி தலைவர்கள் அளித்த பேட்டி: தி.மு.க., பொதுச் செயலரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன்: தி.மு.க., ஆட்சியில் இருந்து இறங்கிய போது, ஒரு லட்சம் கோடி கடன் இருந்தது. தற்போது, 5.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும், அ.தி.மு.க., அரசு நிர்மூலமாக்கி விட்டது.
தேர்தலுக்கு முன் பணிகளை முடிக்க முடியாது என தெரிந்தும், மூன்று மாதங்களில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான டெண்டர்களை விட்டு, அரசு கஜானாவை, முதல்வர் காலி செய்துள்ளார். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், நிதி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள, அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: தமிழகத்தின் நிதி நிலைமை, மிக மோசமான நிலையில் உள்ளது. ஐந்து லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சலுகைகள் என, கூறுகின்றனர். அதற்கு எப்படி நிதி ஒதுக்குவர் என்பது, பட்ஜெட்டில் இல்லை. இந்த கூட்டத் தொடரை, முழுமையாக புறக்கணிக்கிறோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., முகமது அபுபக்கர்: ஆட்சி முடியும் நிலையில், அறிவிக்கப்படும் அறிவிப்புகள், முழுமையாக மக்களை சென்றடையாது. இந்த கூட்டத் தொடரை புகழ்பாடும் கூட்டமாக நடத்துவர் என்பதால் புறக்கணிக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prince Paul - Thoothukudi,ஜெர்மனி
24-பிப்-202122:27:46 IST Report Abuse
Prince Paul வெற்றி நடை போடும் தமிழகமே வெற்றி நடை போடும் .. திறமையற்ற அரசே
Rate this:
Cancel
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
24-பிப்-202121:38:15 IST Report Abuse
Selvam Palanisamy கடனை வாங்குபவர்கள்தான் அந்த கடனை அவர்கள் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவதற்குள் கட்ட வேண்டும் என்று இருந்தால் இவர்கள் கடன் வாங்கவே மாட்டார்கள்
Rate this:
Cancel
24-பிப்-202114:39:41 IST Report Abuse
சம்பத் குமார் 1). அதாவது 2019 January நிலவரப்படி 71 சதவீதம் தமிழ்நாடு அரசாங்கத்தின் வருமானம் சம்பளம்( Salary) மற்றும் பென்ஷன் (Pension) மற்றும் நிர்வாகத்திற்கு செலவிடப்படுகிறது.2). சம்பளமாக ரூ 52,171 கோடிகள் செலவிடப்படுகிறது. அதாவது 31.63 சதவீதம் ஆகும்.3). பென்ஷனாக ரூ 25,362 கோடிகள் செலவிடப்படுகிறது. அதாவது 15.37 சதவீதம் ஆகும்.4).நிர்வாக செலவுக்கு ரூ 10,837 கோடிகள் செலவிடப்படுகிறது. அதாவது 6.57 சதவீதம் ஆகும்.5). இதர செலவுகள் ரூ 28,729 கோடிகள் செலவிடப்படுகிறது. அதாவது 17.42 சதவீதம் ஆகும். இதில் வட்டி, டீசல், பெட்ரோல் , வண்டி மெயின்டன்ஸ், பில்டிங் ரிப்பேர், ஸ்டூல் சேர் வாங்குதல் ,டீ, காஃபி போன்ற செலவினங்கள் அடுக்கும்.6). welfare scheme அதாவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ரூ 47,851 கோடிகள் செலவிடப்படுகிறது. அதாவது 29 சதவீதம் ஆகும். 7). Summary of Final breakup is a). சம்பளம் மற்றும் பென்ஷன் 47 சதவீதம் b) நிர்வாக மற்றும் இதர செலவுகள் 23.99 சதவீதம் c).தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு 29 சதவீதம்.8). இதில் 23.99 சதவீதத்தில் பாதிதான் செலவு செய்வார்கள். மீதி அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வயிற்றுக்குள் சென்று ஜீரணம் ஆகும்.9).கடையாக 29 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செலவு செய்யப்படுகிறது. இதில் எந்தளவு திட்டங்களுக்கு சென்று அடையும் என தெரியவில்லை.10). இந்த நிகழ்வு கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இவ்வாறே நடைப்பெற்று வருகிறது.11). அரசாங்க ஸ்கூல் தலமை ஆசிரியரின் ஒரு மாத சராசரி சம்பளம் ரு 103,000. சம்பளத்தை வாங்கி கொண்டு பாதி நாட்கள் லீவ் மற்றும் விடுப்பு லீவ் எடுத்துக்கொண்டு எல்லா அரசாங்க பள்ளிகளை மூடுயதுதான் மிச்சம்.12). அன்றைய காலகட்டத்தில் எலெக்ஷன் வேலை மற்றும் ஒட்டு எண்ணும் வேலையை ஆசிரியர்கள் செய்தார்கள். DMK இதை மனதில் வைத்து அள்ளி விட்டது சம்பளம். இப்பொழுது கலெக்டர் சம்பளத்தை விட அதிகம். 13). வருடம் வருடம் தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறாவிடில் சம்பளத்தை குறைக்க வேண்டும். தேர்வு வைத்தால் 70 சதவீத ஆசிரியர்கள் தேர்ச்சி பெறமாட்டார்கள். இந்த லட்சணத்தில் இவர்களை நம்பி படிகக்கும் பிள்ளையின் எதிர்காலம் என்ன ஆவது.14). போலீஸ், துப்பரவு தொழிலாளர்கள், ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் கடைநிலை நர்சுகளுக்கு சம்பளம் அதிகம் கொடுத்தால் கூட பரவாயில்லை. அவர்களுக்கு வெகு குறைவாக சம்பளம் தருகிறார்கள் மற்ற அரசாங்க ஊழியர்களின் ஒப்பிடும்போது.15). தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்திய நாட்டின் பிரச்சினை அரசாங்க ஊழியர்களே. 16). இத்தகைய சூழ்நிலையில் 29 சதவீதம் நிதியை வைத்து அரசாங்கம் என்ன செய்யும். இதில் மானியங்கள் மற்றும் Freebies என நம்மை நாம் பழக்கபடுத்தி கொண்டோம். நன்றி ஐயா.
Rate this:
periasamy - Doha,கத்தார்
24-பிப்-202121:04:47 IST Report Abuse
periasamyஆசிரியர்கள் உழைக்கிறார்கள் சம்பளம் மட்டும்தான் வாங்குகிறார்கள் சரியாக வரிசெலுத்துகிறார்கள் மக்களுக்கு கல்விக் கண்ணைத் திறக்கிறார்கல் வெட்டியா சுத்திக்கிட்டு இலவசம் என்ற பிச்சையை எடுக்கும் அரசியல் பின்புலம் கொண்ட வெட்டிக் கூட்டத்தை விட ஆசிரியர்கள் 1000 மடங்கு மேலானவர்கள்...
Rate this:
premprakash - vellore,இந்தியா
24-பிப்-202121:10:47 IST Report Abuse
premprakashஅருமை அருமை அருமை....பாராட்ட வார்த்தை இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X