கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உருமாறிய கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்கும்படி அரசுகளுக்கு உத்தரவு

Added : பிப் 23, 2021
Share
Advertisement
சென்னை:உருமாறிய வைரஸ் பரவல் கருதி பொது மக்களின் உடல் நலனை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தகுந்த முடிவை உடனடியாக எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரை சேர்ந்த. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில் 'உருமாறிய வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டன் மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் இருந்து வரும் அனைத்து

சென்னை:உருமாறிய வைரஸ் பரவல் கருதி பொது மக்களின் உடல் நலனை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தகுந்த முடிவை உடனடியாக எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரை சேர்ந்த. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில் 'உருமாறிய வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டன் மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிக்கவும் தனிமைப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார்.மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி ''மத்திய அரசு ஏற்கனவே வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவித்துள்ளது'' என்றார்.

தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதாக தெரிவித்தார்.இதையடுத்து முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மத்திய உள்துறை அமைச்சகம் பிரேசில், தென் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் இருந்து வரும் பயணியர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெரிவித்துள்ளது.மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அமராவதி அகோலாவிலும் உருமாறிய வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் உடனடி உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கிறோம்.இருந்தாலும் பொது மக்களின் உடல் நலனை பாதுகாக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் உடனடியாக தகுந்த முடிவை எடுக்க வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.விசாரணையை ஏப். 5க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X