கோவை:சென்னையை சேர்ந்த வுமிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்ட்டெகோ பிரதம நகை சேகரிப்புகளின் கண்காட்சி, ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாண்டா ஓட்டலில், இன்றும் நாளையும் நடக்கிறது.இதன் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் வுமிடி கூறுகையில்,' 'இக்கண்காட்சியில், இலகுரக வைரங்கள் பொறிக்கப்பட்ட பிளாட்டினம் நகைகள், பாரசீக கலை மற்றும் கட்டட கலைகளில் இருந்து ஈர்க்கப்பட்ட பெர்சியானா நகைகள், டாலியா, கிரிகாமி, நவரத்னா உள்ளிட்ட அரியவகை நகைகள் மற்றும் கையால் வடிவமைக்கப்பட்ட திருமண சேகரிப்பு, பழங்கால நகைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன; கண்காட்சி, காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE