அன்னூர்;அன்னூர், மன்னீஸ்வரர் கோவிலில், 10 மாதங்களுக்கு பிறகு திருவாசகம் முற்றோதல் நடந்தது.சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், ஒவ்வொரு மாதமும், திருவாதிரை நாளன்று, அன்னூர், மன்னீஸ்வரர் கோவிலில், திருவாசகத்தின் அனைத்து பாடல்களையும் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக, 10 மாதங்களாக இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு துவங்கி, மதியம் 1:00 மணி வரை திருவாசகம் வாசித்தல் நடந்தது.கருவலூர், அன்னூர், புளியம்பட்டியை சேர்ந்த சிவ பக்தர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் சில பாடல்களை பாடினர். 'இனி தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நாளன்று, திருவாசகம் முற்றோதல் நடக்கும்' என, சிவனடியார்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE