செடி அத்தி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கீழ் அத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தோட்டக்கலை துறை பட்டயம் படித்த விவசாயி விமல்ராஜ் கூறியதாவது:அத்தி பழ சாகுபடி பொறுத்தவரை, தினசரி வருவாய் தரக்கூடிய பண பயிர். நான், சொட்டு நீர் பாசன முறையில், அத்தி பழச் செடிகளை நட்டுள்ளேன். இது, ஒன்பதாவது மாதத்தில் இருந்து வருவாய் தரக்கூடியது. இலைக்கு இலை, பழ மகசூல் கிடைக்கும்.
ஒரு ஏக்கர் பரப்பில், ஒரு முறை முதலீடு செய்து, அத்தி நடவு செய்தால், வருவாய் கொடுத்துக் கொண்டே இருக்கும். 1 ஏக்கர் நெல்லில், ஆண்டுக்கு, 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கும்; செலவுபோக, 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே மிஞ்சும்.ஆனால், அத்தி பழத்தில் அவ்வாறு இல்லை. ஒரு ஏக்கர் நிலத்தில், செடி அத்தி சாகுபடி செய்தால், ஓராண்டுக்கு, 4.20 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். நெல்லில் கிடைக்கும் வருவாயைவிட, ஆறு மடங்கு கூடுதல் வருவாய்.அத்தி சாகுபடி செய்ய நினைக்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 99943 48483
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE