சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், உத்திரமேரூர் வட்டக்குழு சார்பில், பல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம், நேற்று நடந்தது. இதில் பங்கேற்றவர்கள், கையில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட

உத்திரமேரூர் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், உத்திரமேரூர் வட்டக்குழு சார்பில், பல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம், நேற்று நடந்தது.

இதில் பங்கேற்றவர்கள், கையில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை வகித்தார்.இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை, 3,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். தனியார் துறையில், மாற்றுத்திறனாளிக்கு, 5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கையில் திருவோடு ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதேபோல், திருப்போரூர் உட்பட, பல தாலுகாக்களில், இப்போராட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X