பாரிஸ்:மதப் பிரிவினைவாதிகளை ஒடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி கூறிய கருத்துக்கு ஐரோப்பிய நாடான பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரான்சை சேர்ந்த ஒரு நாளிதழில் கடந்தாண்டு மதம் பற்றிய கேலிசித்திரத்தை வெளியிட்டது. இதற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆனால் அந்த கேலி சித்திரத்துக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரான்சில் மதத் தீவிரவாதிகளால் ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.இதையடுத்து மதத்தின் பெயரில் பிரிவினையை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதா பிரான்ஸ் பார்லியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதை விமர்சித்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்திருந்தார். 'சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது ஆபத்தானது' என அவர் கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பிரான்சுக்கான பாகிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.'மத சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவோரை ஒடுக்கவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மையை உணர்ந்து பாகிஸ்தான் செயல்பட வேண்டும்' என பிரான்ஸ் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE