பொது செய்தி

தமிழ்நாடு

வானமகள் உன்னை வாழ்த்துகிறாள் பூமிமகள் உன்னை போற்றுகிறாள்...

Added : பிப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
இந்திய பெண் அரசியல்வாதிகளில் முத்திரை பதித்தவர் ஜெயலலிதா. கடின உழைப்பால் சினிமா, அரசியல் வானில் உச்சம் தொட்டவர். இவரது பிறந்த தினமான பிப். 24, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கர்நாடகாவின் மைசூருவில் 1948 பிப். 24ல் பிறந்தார். இளம் வயதில் பரத நாட்டியம், கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை
 வானமகள் உன்னை வாழ்த்துகிறாள்  பூமிமகள் உன்னை போற்றுகிறாள்...

இந்திய பெண் அரசியல்வாதிகளில் முத்திரை பதித்தவர் ஜெயலலிதா. கடின உழைப்பால் சினிமா, அரசியல் வானில் உச்சம் தொட்டவர். இவரது பிறந்த தினமான பிப். 24, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கர்நாடகாவின் மைசூருவில் 1948 பிப். 24ல் பிறந்தார். இளம் வயதில் பரத நாட்டியம், கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார்.

குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. தன் திறமையால் 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். எம்.ஜி.ஆர்., -- ஜெயலலிதா ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.எம்.ஜி.ஆர்., வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினரானார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1984ல் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்ற போது நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., -அமோக வெற்றி பெற்றது.

இதில், ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் 1988ல் ஜெ.,- ஜானகி அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. 1989 சட்டசபை தேர்தலில், ஜெ., தலைமையிலான, அ.தி.மு.க., 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வென்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். பின் ஜானகி ஒதுங்கிக் கொள்ள அ.தி.மு.க., ஒன்றிணைந்தது.


இமாலய வெற்றி



அ.தி.மு.க., கூட்டணி 1991 தேர்தலில் இமாலய வெற்றி பெற்றது. முதன் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 2001, 2011 தேர்தல்களில் வென்று முதல்வரானார். 2016 தேர்தலில் வென்று, எம்.ஜி.ஆருக்கு பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகி சாதித்தார். 2016 செப்., 22ல் உடல்நலம் பாதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்கு பின் டிச.5ல் காலமானார்.


6


தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர்.இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2வது நபர். தேர்தல் மூலம் தேர்வான தமிழத்தின் முதல் பெண் முதல்வர். 29 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர். தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர். ஏழு மொழிகளில்
சரளமாக பேசத் தெரிந்தவர்.


100


உலகத்தமிழ் மாநாடு, மழைநீர் சேகரிப்பு, தொட்டில் குழந்தை, மகளிர் போலீஸ் ஸ்டேஷன், பெண் கமாண்டோ படை, லாட்டரி ஒழிப்பு, அம்மா உணவகம், இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், அரசு கேபிள் 'டிவி', 100 யூனிட் மின்சார சலுகை, முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தியது போன்றவை இவரது சாதனை திட்டங்களில் முக்கியமானவை.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yuga - chennai,இந்தியா
24-பிப்-202110:49:14 IST Report Abuse
yuga தமிழகத்தின் வளர்ச்சிக்காக இறுதி வரைக்கும் பாடு பட்டு முதல்மாநிலமாக கொண்டு வந்த பெண்சிங்கமே திடீரென காலன் உங்களை அழைத்து விட்டான்,மக்களின் இதயங்களில் குடி இருந்த அன்பு அம்மா. சில மீடியாக்கள் உங்களை குற்றம் சொன்னாலும் என்றுமே எதிர் கட்சியினர் போட்ட எல்லா பொய் வழக்குகளையும் வெற்றி பெற்று இறுதியில் பலரின் சாதியில் உங்களின் மனமும் உடலும் பாதிக்கப்பட்டு இந்த உலகை விட்டு விட்டு சென்ற அன்புள்ளம் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களே உங்களின் இறப்புக்கு காரணமானவர்களை கடவுள் பார்த்து கொள்ளுவார்.
Rate this:
ravikumar - MUSCAT,ஓமன்
24-பிப்-202115:30:27 IST Report Abuse
ravikumarஉண்மை. என்ன ஒரு மாற்று கருத்து இருந்தாலும் ஒரு நல்ல தலைமை பண்பு உள்ள தைரியமான பெண்மணி....
Rate this:
Cancel
Raja Vardhini - Coimbatore,இந்தியா
24-பிப்-202107:17:09 IST Report Abuse
Raja Vardhini எல்லாம் சரி.... மன்னார்குடி மாபியா கும்பலான சசிகலா கோஷ்டியை தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அனுமதித்த "சாதனையையும்" சொல்லுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X