கோவை:ராம்நகரில் ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமருக்கு, இன்று ஜீர்ணோதாரண மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.கோவை ராம்நகரில், பழமையான கோதண்ட ராம சுவாமி தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ வில்வலிங்கேஸ்வரர் மற்றும் நவகிரஹ சன்னதிகளுக்கு, ஜீர்ணோதாரண மஹா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.இன்று காலை 4:00 மணிக்கு, ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. 5:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி, 5:30 மணிக்கு பூர்ணகும்பம் புறப்படுகிறது.காலை 6:00 முதல் 7:30 மணிக்குள் அனைத்து சன்னதி மூர்த்திகளுக்கும், ராஜகோபுர விமான கலசங்களுக்கும், ஒரே சமயத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மாலை 5:00 மணிக்கு சுவாமி வீதி உலா, புஷ்பஅலங்காரம், நாமசங்கீர்த்தன இசையோடு நடை பெறுகிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜையும், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாட்டிய நிகழ்வுகளும்நடைபெறுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE