சென்னை:தமிழகத்தில், 2,674 தொழில் நிறுவனங்களுக்கு, 21 ஆயிரத்து, 912 ஏக்கர் பரப்பளவு நிலத்தை, 'சிப்காட்' நிறுவனம் ஒதுக்கியுள்ளது; இன்னும், 3,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீட்டுக்கு தயாராக உள்ளது.
இது குறித்து, பட்ஜெட்டில் கூறியதாவது: தமிழகத்தில் முதலீடு செய்துள்ள, 2,674 தொழில் நிறுவனங்களுக்கு, 21 ஆயிரத்து, 912 ஏக்கர் நிலத்தை, சிப்காட் என்ற, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் ஒதுக்கியுள்ளது. இன்னும், 3,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீட்டுக்கு தயாராக உள்ளது.கூட்டு முயற்சியின் அடிப்படையில், புதிய தொழில் பூங்காக்கள் அமைக்க, சிப்காட் ஊக்கம் அளிக்கிறது.
தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி முகமை வாயிலாக, வல்லம் வடகாலில் தொழிலக வீட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, பாக்ஸ்கான் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு, 680 கோடி ரூபாய் மதிப்பில் தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. கிருஷ்ணகிரி அருகில் உள்ள, புதிய டாடா மின்னணுவியல் திட்டத்திற்காக வசதிகள் ஏற்படுத்தப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்க, சென்னை அருகில், காவனுாரில் நிதி தொழில்நுட்ப நகரத்தை, 'டிட்கோ' என்ற, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், 260 ஏக்கரில் உருவாக்கி வருகிறது.புதிய நிதி தொழில்நுட்ப கொள்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக, நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான, உலக அளவிலான ஒரு மையமாக சென்னை உருவாக வழி வகுக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE