கோவையில் கோதண்ட ராமஸ்வாமி கோவில் கட்டப்பட்டது முதல் சனிக்கிழமைகளில் பஜனை, உற்சவம் ஆகியவை நடக்கும். மார்கழி மாதங்களில் அதிகாலை நேரங்களில் திருப்பாவை, திருவெம்பாவை உற்சவங்கள் நடைபெறும்.உற்சவ நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில் கோஷ்டி கான நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இதில் பக்தர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்பர். பொதுமக்களின் கூட்டம் நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டே போனது. இதற்கு என்ன செய்வது என்று கோவில் கமிட்டி யோசித்தது.இதனடிப்படையில் கோவிலுக்கு இடப்பகுதியில் இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பஜனைகள் ஆகியவற்றை நடத்தவும், சுவாமியை வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் இளைப்பாறுவதற்காகவும், மண்டபம் ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.கடந்த, 1965ம் ஆண்டு கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இடப்பகுதியிலுள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் பக்தி சொற்பொழிவுகள், சமய சொற்பொழிவுகள், பஜனைகள் ஆகியவை விழாக்காலங்களிலும், சனிக்கிழமை தோறும் நடக்கிறது. மற்ற நாட்களில் சுவாமியை வழிபாடு செய்து விட்டு வரும் பக்தர்கள் இளைப்பாற வசதி செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE