கோவை:கோவையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஆர்.சி.புத்தகம் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.கோவையில் வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு ஆகிய நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன.அந்தந்த அலுவலகங்களில் அன்றாடம், 50க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.புதிதாக பதிவாகும் வாகனங்களுக்கு, பதிவான நாளிலிருந்து இரண்டொரு நாளில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான, ஆர்.சி.புத்தகம் வழங்கப்படும். கடந்த ஒரு மாதமாக, ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஆர்.சி., புத்தகம் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.போலீஸ் வாகன சோதனை, வங்கிகளில் ஆவணங்கள் சமர்ப்பித்தல், அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் நிதி பெறுவது உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையிலுள்ள போக்குவரத்துத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, ஒவ்வொரு அலுவலகத்துக்கும், 10,000 ஸ்மார்ட் கார்டு ஆர்.சி.,புத்தகம் வழங்கப்படும்.தீர்ந்தபின் அடுத்த 10,000 கார்டுகள் வழங்கப்படும். கோவையில் தெற்கு மற்றும் வடக்கு அலுவலகத்தில் தட்டுப்பாடு இல்லை. மீதமுள்ள இரு அலுவலகங்களிலும், தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும்' என்றனர்.திட்ட நிதி பெறுவதில் சிக்கல்அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு, வாகனப்பதிவுக்கு பின், ஒரிஜினல் ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ் நகல், ஆதார், வங்கி பாஸ் புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றின் நகலை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் வாகனத்துக்கான மானியத்தொகை, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வந்து சேரும். ஆர்.சி., புத்தகம் இல்லாமல் வாகனம் வாங்குவதிலும் சிக்கல் நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE