பொது செய்தி

தமிழ்நாடு

பசுமைத்திறன் மேம்பாட்டு  பயிற்சி: வன மரபியல் நிறுவனத்தில் துவக்கம் 

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை:இந்திய வன மரபியல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் சூற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.தரமான நடவு பொருள் உற்பத்தி, பூச்சி கட்டுப்பாடு, தாவர திசு வளர்ப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் பயிற்சி வகுப்புகளை, நிறுவன இயக்குனர் குன்னிகண்ணன் தொடங்கி வைத்தார்.அவர் பேசுகையில், ''இந்த பயிற்சியானது, 30 சதவீதம்

கோவை:இந்திய வன மரபியல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் சூற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.தரமான நடவு பொருள் உற்பத்தி, பூச்சி கட்டுப்பாடு, தாவர திசு வளர்ப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் பயிற்சி வகுப்புகளை, நிறுவன இயக்குனர் குன்னிகண்ணன் தொடங்கி வைத்தார்.அவர் பேசுகையில், ''இந்த பயிற்சியானது, 30 சதவீதம் வகுப்பறையிலும், 70 சதவீதம் களத்திலும் இருக்கும். பயிற்சி பெறுவோர், வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவாக வேண்டும்,'' என்றார்.ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வாரியர் பேசுகையில், ''இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக, இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என்றார்.பயிற்சியில், நாடு முழுவதும் இருந்து 50 பேர் பங்கேற்றுள்ளனர். பயிற்சிக்காலத்தில் உணவு, தங்குமிடம், பாடபுத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மத்திய சூற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X