கோவை:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், வினா வங்கி புத்தக வினியோகம் துவங்கப்பட்டுள்ளது.கோவையில், ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், இப்புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால், பள்ளிகள் திறப்பது தாமதமானதால், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், வினாவங்கி வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது.இந்நிலையில் முதற்கட்டமாக, கடந்தாண்டு அச்சடிக்கப்பட்ட, பழைய வினா வங்கி புத்தகங்கள் விற்பனை நேற்று துவங்கியது. இந்த வார இறுதியில், புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பழைய வினா வங்கியில், முழு பாடத்திட்டமும் உள்ளது. இதில், குறைக்கப்பட்ட சிலபஸ்க்கு ஏற்ப, தேவையில்லாத பகுதிகளை மாணவர்கள் நீக்கிவிட்டு, பயிற்சிக்கு பயன்படுத்தலாம். தற்போது, பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவுக்கான, வினா வங்கி புத்தகங்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன. பள்ளி நேரத்தில், பெற்றோர் வந்து வாங்கி செல்லலாம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE