சென்னை:''தமிழகத்திற்கான மானியத்தின் பங்கு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான பன்னீர்செல்வம் 2021 - 22ம் நிதியாண்டிற் கான, இடைக்கால பட்ஜெட்டை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.நிலைக்குழுவில் அநீதிஅப்போது, அவர் பேசியதாவது:மத்திய அரசு நியமித்த,15வது நிதிக்குழுவின்இறுதி அறிக்கை, தமிழகத்தின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. 14வது நிதிக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியையும் சரி செய்யவில்லை.
நடப்பு நிதியாண்டில், தமிழகத்திற்கான வருவாய் பற்றாக்குறை மானியமான, 4,025 கோடி ரூபாயை வழங்க, முதல் முறையாக இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இறுதி அறிக்கையில், அது, 2,204 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. இத்தொகை, 2021 - 22ம் ஆண்டிற்கு மட்டுமே வழங்கப்படும்.
தமிழகத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட, மொத்த உள்ளாட்சி மானியதொகை, 2020 - 21ம் ஆண்டில், 5,344 கோடியாக இருந்தது. இது, 2021 - 22ம் ஆண்டில், 3,979 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், 14வது நிதிக்குழு பரிந்துரைத்ததை விட, தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி களுக்கான, மொத்த மானியத்தொகை, 15வது நிதிக்குழு பரிந்துரைகளில், கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
முந்தைய நிதிக்குழு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைத்த, ஒட்டுமொத்த மானியத் தொகையில், நிபந்தனைஇல்லாத மானியத்தின் பங்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 80 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள மானியங்கள், செயல் திறன் மானியமாகவும், ஊக்க மானியமாகவும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப் படும். முந்தைய அனுபவத்தால், இந்த மானியங்கள், உரிய நேரத்தில் விடுவிக்கப்படுமா என்ற, சந்தேகம் உள்ளது.
கடந்த, 14வது நிதிக்குழு பரிந்துரைகளின்படி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியம்; 2,029.02 கோடி ரூபாய் செயல்திறன் மானியம் வழங்கப்பட வேண்டும். அது, மத்திய அரசால் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
வலியுறுத்தல்
பெரும்பாலான மாநிலங்களுக்கு, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட செயல்திறன் மானியம், 2017 - 18 முதல், மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை. இதை, காலதாமதமின்றி, மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.மத்திய அரசின் திட்டங்களுக்கு, மத்திய அரசின் பங்கிற்கு பதிலாக, 15வது நிதிக்குழு பரிந்துரைத்த மானியங்களை பயன்படுத்த வேண்டாம் என, மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
மாநிலங்களுக்கு நிதித் துறை பரிந்துரைத்த மானியங்களை, எந்த ஒரு கூடுதல் நிபந்தனை களும் விதிக்காமல், மாநிலங்களுக்கு நேரடியாக, மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.48 சதவீதம் வளர்ச்சிபெட்ரோல், டீசல் மீதான பல்வேறு வரிகள் காரணமாக, மத்திய அரசின் வருவாய், 2019ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2020ல், 48 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.
இதே காலகட்டத்தில், தமிழகத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத்தீர்வை பங்கு குறைந்து, 39.40 சதவீதம் மட்டும் பெறப்பட்டுள்ளது. அதேபோல, தனி நபர் வருமான வரி மீதான கூடுதல் கட்டணம் மேலும் விரிவாக்கப்பட்டு, மத்திய அரசுக்கு பெரும் வருவாயை அளித்து வருகிறது. அந்த வருவாயில் இருந்து, மாநிலங்களுக்கு எந்தவிதமான பங்கும் கிடைப்பது இல்லை. மாநிலங்கள் தங்களுக்குரிய வருவாயின் பங்கை பெறுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, பன்னீர்செல்வம் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE