பொது செய்தி

தமிழ்நாடு

காவல் துறை நவீனத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

Added : பிப் 23, 2021
Share
Advertisement
சென்னை:காவல் துறையை நவீனமயமாக்குதல் பணிக்காக, 100.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.* காவல் துறைக்காக, 2011 - 12ம் பட்ஜெட்டில், 3,513.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2021 - 22 இடைக்கால பட்ஜெட்டில், காவல் துறைக்கான ஒதுக்கீடு, 9,567.93 கோடி ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது* நடப்பு, 2020 - 21ல், 11 தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, தமிழகத்தில், தீயணைப்பு நிலையங்கள் எண்ணிக்கை, 347 ஆக
 காவல் துறை நவீனத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

சென்னை:காவல் துறையை நவீனமயமாக்குதல் பணிக்காக, 100.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* காவல் துறைக்காக, 2011 - 12ம் பட்ஜெட்டில், 3,513.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2021 - 22 இடைக்கால பட்ஜெட்டில், காவல் துறைக்கான ஒதுக்கீடு, 9,567.93 கோடி ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது

* நடப்பு, 2020 - 21ல், 11 தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, தமிழகத்தில், தீயணைப்பு நிலையங்கள் எண்ணிக்கை, 347 ஆக அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில், தீயணைப்புத் துறைக்கு, 436.68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* சாலை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், 2016ல், 17 ஆயிரத்து, 218 ஆக இருந்த உயிரிழப்பு, 2020ல், 8,060 ஆக குறைந்துள்ளது.

* புதிய நீதிமன்றங்கள் கட்டுவதற்காக, 289.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையுடன் சேர்த்து நீதி நிர்வாகத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில், 1,437.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X