சுகாதாரத்துக்கு ரூ.19 ஆயிரம் கோடி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரத்துக்கு ரூ.19 ஆயிரம் கோடி!

Added : பிப் 23, 2021
Share
சென்னை:தமிழக சுகாதாரத் துறைக்கு, இடைக்கால பட்ஜெட்டில், 19 ஆயிரத்து, 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:* தமிழகத்தில், 2010ல், குழந்தை இறப்பு விகிதம், 1,000த்திற்கு, 24 ஆக இருந்தது; 2018ல், 15 ஆக குறைந்துள்ளது. தாய்மார்களின் இறப்பு விகிதம், ஒரு லட்சம் பேரில், 90 ஆக இருந்து, 2019ல், 57 ஆக குறைக்கப்பட்டு உள்ளது* அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டில்,

சென்னை:தமிழக சுகாதாரத் துறைக்கு, இடைக்கால பட்ஜெட்டில், 19 ஆயிரத்து, 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில், 2010ல், குழந்தை இறப்பு விகிதம், 1,000த்திற்கு, 24 ஆக இருந்தது; 2018ல், 15 ஆக குறைந்துள்ளது. தாய்மார்களின் இறப்பு விகிதம், ஒரு லட்சம் பேரில், 90 ஆக இருந்து, 2019ல், 57 ஆக குறைக்கப்பட்டு உள்ளது

* அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டில், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக, 16 கோடி ரூபாய், சுழற்சி நிதி உருவாக்கப்பட்டுள்ளது

* தமிழகத்தில் துவங்கப்பட்டு வரும், 2,000 'மினி கிளினிக்'குகளுக்கு, 144 கோடி ரூபாய்; புதிய மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, 2,470 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும், சிகிச்சையை மேம்படுத்தும் சுகாதார சீரமைப்பு திட்டத்திற்கு, 2021 - 22ம் நிதியாண்டில், 291.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், நகர்ப்புற சுகாதார திட்டத்திற்கு, 815.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X