சென்னை:தமிழகத்தில் நகர்ப்புற வீட்டுவசதி திட்டங்களுக்கு, இடைக்கால பட்ஜெட்டில், 3,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
* பட்ஜெட்டில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு, 2,350 கோடி ரூபாய்; 'அம்ருத்' திட்டத்துக்கு, 1,450 கோடி ரூபாய்; பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்துக்கு, 3,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
* தமிழகத்தில் முக்கியமான தொழில் வழித்தடங்களில், அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக் காக, தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டு திட்டத்துக்கு, 871.31 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது
* கொசஸ்தலையாறு வடிநிலத்தில், ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் வலையமைப்பு திட்டத்துக்கு, 287 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE