பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை: விமான நிலையத்தில் தீவிரம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை:வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா, தீவிரமாக பரவி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு, கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்துள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களையும், கண்காணிக்க

கோவை:வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா, தீவிரமாக பரவி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு, கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்துள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களையும், கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து கோவைக்கு, நேரடி விமான சேவை இல்லாவிட்டாலும், துபாய், மும்பை வழியாக, பயணிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து, கோவைக்கு நேரடி விமான சேவை உள்ளது.எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று இல்லை என்றால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, தொற்று இருந்தால் மருத்துவமனையிலும், இல்லாதவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X