சென்னை:'நீட் தேர்வுக்கான கட்டண உயர்வை, திரும்பப் பெற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: மருத்துவ மேற்படிப்புகளுக்கான, நீட் தேர்வு கட்டணம், ஓ.பி.சி., பொதுப் பிரிவினருக்கு, 3,750ல் இருந்து, 5,015 ரூபாயாகவும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 2,750ல் இருந்து, 3,835 ரூபாயாகவும் உயர்த்தி, தேசிய தேர்வுகள் முகமை உத்தரவிட்டிருக்கிறது.
ஒரு நாளில், ஒரு வேளை மட்டும் நடைபெறும் தேர்வுக்கான கட்டணத்தை, மூன்றில் ஒரு பங்கு அளவு உயர்த்துவதும், 5,015 ரூபாய்க்கு கட்டணம் வசூலிப்பதும் நியாயமற்றது. இந்தக் கட்டண உயர்வை, தேசிய தேர்வுகள் முகமை, உடனே திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
மற்றொரு அறிக்கையில், 'தமிழக அரசு, தயாரித்து, தாக்கல் செய்துள்ள, நடப்பாண்டிற்கான நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கது' என, தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE