சென்னை:'அரசு ஊழியர்களின் கோரிக்கை, விரைவில் அமைய உள்ள, தி.மு.க., ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இரட்டை வேடம் போடும், முதல்வர் பழனிசாமி., தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளை, வாபஸ் பெறுவதாக, ஒரு புறம் நாடகமாடுகிறது. மற்றொரு புறம் உரிமைக்காகப் போராடுவோரை கைது செய்து, கொடுமைப்படுத்தும் படலம் அரங்கேறுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைக்கு, அரசு செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது, கண்டனத்துக்குரியது.
உரிமை போராட்டம் நடத்துவோருக்கு, அன்பான ஒரு வேண்டுகோள். செவிமெடுக்காத, அ.தி.மு.க., அரசுக்கு எதிரான போராட்டங்களை, ஒத்தி வையுங்கள். உங்கள் கோரிக்கைகள், விரைவில் அமைய உள்ள, தி.மு.க., ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE