சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

காவலர் தேர்வும்,- தெளிவும்!

Added : பிப் 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழக காவல் துறையில் நான், 1966 முதல், 1973 வரை, கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, காவலர் தேர்வு பணிகள் சிறப்பாக நடைபெற்றன. சார் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான, வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுடன் காவலர்களை, காவல் துறை கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்தனர். அந்தந்த மண்டலங்களை சேர்ந்த காவல் துறை துணைத்தலைவர்கள், பணி நியமன அதிகாரிகளாக செயலாற்றினர். அந்தந்த மண்டலத்தின் காவல் துறை
 காவலர் தேர்வும்,- தெளிவும்!

தமிழக காவல் துறையில் நான், 1966 முதல், 1973 வரை, கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, காவலர் தேர்வு பணிகள் சிறப்பாக நடைபெற்றன. சார் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான, வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுடன் காவலர்களை, காவல் துறை கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்தனர். அந்தந்த மண்டலங்களை சேர்ந்த காவல் துறை துணைத்தலைவர்கள், பணி நியமன அதிகாரிகளாக செயலாற்றினர். அந்தந்த மண்டலத்தின் காவல் துறை கண்காணிப்பாளர்கள், முறையான கால இடைவெளியில் சந்தித்து பேசி, விண்ணப்பதாரர்கள் குறித்து, இறுதி முடிவு செய்வோம்.


நடவடிக்கைஅதன்பின், ஒப்புதல் பெற வேண்டி, காவல் துறை துணை தலைவர்களுக்கு அனுப்பி வைப்போம். எனவே, சீரான நடைமுறையாகவே இந்தத் தேர்வும் அமைந்திருந்தது.ஆனால், 1976 முதல், ஊழல் என்ற அடாத கொடுமை, பெரு வெள்ளமென பாய்ந்தோட துவங்கியது; 1991 வரை தொடர்ந்தது.ஊழல் மற்றும் முறைகேடுகள் மிகுந்திருந்ததால், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சிலர், நீதிமன்றம் கூடச் சென்றனர். தேர்வு பணியை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், காவலர் பணிக்கான நடைமுறைகளை நான் தொடர்ந்து மேற்கொண்டபோது, 1976 முதல், 1991 வரை மேற்கொள்ளப்பட்ட முந்தைய காவல் துறை தேர்வு நடவடிக்கைகளை நீக்கம் செய்யவும், நீதிமன்றம் முடிவு செய்தது.

மேலும், முதுநிலை அதிகாரிகள் சிலர் மீது, ஊழல் கண்காணிப்பு பணி இயக்கத்தால், விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. விரிவான விசாரணைக்கு பின், ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புத் துறை, அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத்தக்க அறிக்கையை அனுப்பியது.இந்த பின்னணியில் தான், முதல்வர் ஜெயலலிதா, இடையிலுள்ள காவல் துறை கூடுதல் தலைமை இயக்குனர் என்ற பதவியை விடுத்து, காவல் துறைத் தலைவர்கள் பதவித் தரத்திலிருந்து, எனக்கு நேரடியாக, காவல் துறையின் தலைமை இயக்குனராக பதவி உயர்வு வழங்கினார். அதிகளவிலான வெற்றிடங்கள் இருந்த காரணத்தால், முந்தைய காவலர் பணிகளை விடுத்து, அப்பணிகளை மீண்டும் புதிதாகத் துவங்க வேண்டும் என்ற பணியை, நான் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால் ஆராய வேண்டிய பிரச்னையாக மாறிய, 1983 -- 84ல் நடந்த, உதவி ஆய்வாளர்களுக்கான காவலர் நடைமுறையால், தேர்வு செய்யப்பட்டிருந்த பட்டியலில், முதலிடம் பெற்ற நபர், பணி நியமனம் செய்யப்படவில்லை. மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு, ஊழல் செய்த அதிகாரி மீது குற்ற வழக்கு தொடர வேண்டுமென்று நான் பரிந்துரை செய்த நிலையில், அந்த அதிகாரி பதவி உயர்வு பெற்றார்.பின், மீண்டும், 1990ல், தமிழீழ விடுதலைப் புலிகளால் பயிற்சியளிக்கப்பட்ட, அந்த இயக்கத்தைச் சேர்ந்த நபர்களை, காவல் படையில் சேர்ப்பதற்கு, அப்போது அதிகாரத்தில் இருந்த கட்சியால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து, ஊடகங்களில் பெருமளவில் விவாதிக்கப்பட்டது. ஆனால், நல்ல காலமாக, 1991 ஜனவரியில், ஜனாதிபதி ஆட்சி, மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது; காவலர் தேர்வு பணிகள் நிறுத்தப்பட்டன.


மனுக்களுக்கு தீர்வுபாதிக்கப்பட்ட நபர்களால் தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையிலான, எங்களின் அயராத முயற்சியின் விளைவாக, அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. புதிய காவலர் ஆணையத்தின் ஆதரவின் படி, எங்களின் புதிய நடைமுறைகளை துவங்குவதற்கான புதிய பாதையை, அது அமைத்துத் தந்தது.இந்த ஊழல் கொடுமை, தமிழகத்தில் மட்டும் நிலவும் பிரச்னை அல்ல. நாடு முழுதும், இது புற்றுநோயாக உள்ளது. மத்திய காவல் துறை அமைப்பிலும் இது இருந்தது.மத்திய காவல் துறை அமைப்பு மற்றும் மாநில காவல் துறையின் தலைமை பதவியில் உள்ள அனைவரும், அவர்களின் அமைப்பிற்கான காவலர் சேர்ப்பு நடைமுறையில் உள்ள ஊழல் குறித்து, மனவேதனையுடன் என்னிடம் தெரிவித்தனர்.

இவை அனைத்தும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட வல்லுனர்கள், வழக்குரைஞர்கள், முதுநிலை அதிகாரிகளுடனான தீவிர ஆலோசனைக்குப் பின், என்னை ஒரு உறுதியான நல்ல முடிவெடுக்க செய்தன. அனைத்து வகையினர்களுக்கும், 25 ரூபாய் என, ஒரே முறை கட்டணத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. எஸ்.பி.ஐ., வங்கி மூலம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. விண்ணப்பம் விற்பனை செய்யும் நிலையிலேயே, ஊழலைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. இதனால், விண்ணப்பங்களை விற்பனை செய்யும் அதிகாரம், காவல் துறையிடமிருந்து, வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்காக, காவல் துறையினர் மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்பது பொருளாகாது. அரசியல்வாதிகளின் தலையீட்டை குறைப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது.
பாரதிய ஸ்டேட் வங்கி, மிகச் சிறப்பாக இந்த வகையில் செயலாற்றியது. இந்த நடைமுறையின் போது, பின்தங்கியவர்கள், வறுமைப் பிடியில் வாடியவர்கள் மற்றும் நலிவுற்ற மக்கள் மீதும் நாங்கள் உரிய கவனம் செலுத்தினோம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு, 30 சதவீதம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு, 20 சதவீத இடங்கள் என்ற முறையில், கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும் என்றிருந்த நிலையில், அந்த பிரிவுகளை சேர்ந்த, 75 சதவீத விண்ணப்பதாரர்களை நாங்கள் பணிக்கு கொண்டு வந்தோம்.

பட்டியலிடப்பட்ட இனம் மற்றும் பழங்குடியினர் குறித்த தேர்வில், பட்டியலிடப்பட்ட இனத்தினருக்கு, 18 சதவீதம் மற்றும் பழங்குடியினர்களுக்கு, 1 சதவீத இடம் கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், நாங்கள் தேர்வு செய்த நபர்களுள், 27 சதவீத நபர்கள் நலிந்த வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். இதுபோல், 75 சதவீத விண்ணப்பதாரர்கள், கிராமப்புற பகுதிகளில் வாழ்ந்தவர்கள். பட்டதாரிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என, பல விண்ணப்பதாரர்களும் முறையாக தேர்வு செய்யப்பட்டனர்.


அதிக கவனம்வகுப்பு சார்ந்த சுழற்சி முறை கோட்பாட்டை அரசு தெளிவாக வரையறுத்திருந்த போதிலும், முந்தைய ஆண்டுகளில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.பல ஜாதிகளை சேர்ந்த சங்கத்தினர் நேரில் வந்து, எனக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவிக்கும் அளவிற்கு, எங்கள் பணி மீது நல்ல மதிப்பு இருந்தது. இது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா என்னை பாராட்டினார்.

காவலர் தேர்வின் போது, 5,000 இடங்களுக்கு, 75 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. அதுபோல, 5,000 எஸ்.ஐ., பதவிகளுக்கும், 75 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன.அவற்றை நேரடியாக சரி பார்ப்பதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதால், கணினிமயமாக்கினேன். இந்த முறை, முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் ஈர்த்தது. இதே போல, ஒரே நாளில், உடல் பரிசோதனைகள் முறையாக நடக்க, குறியீடு எண்கள் வழங்கப்பட்டன; அதுவும் கணினிமயமாக்கப்பட்டது.

பல்வேறு மையங்களுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஆள் மாறாட்டம் செய்யாமல் இருக்க, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.விண்ணப்பதாரர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு முன், ஒவ்வொரு நிலையும் தகுதி பெற வேண்டிய நிலையாக மாற்றப்பட்டது. சரிபார்ப்பின் ஆரம்ப விதிமுறைகளான வயது மற்றும் கல்வித் தகுதி போன்றவற்றிற்கு பின், விண்ணப்பதாரர்கள் உடல் திறன் சோதனை மற்றும் இறுதியாக எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். தேர்வு வினாத்தாள்கள், அலுவலகத்திலேயே தேவையான பல பிரதிகள் எடுக்கப்பட்டன. எழுத்துத் தேர்வு நடைபெறும் இடத்திற்கு நேரடியாக நானே சென்றேன்.

இரவு முழுதும், அலுவலகத்திலேயே கழித்தேன். எனவே, வினாத்தாள் கசிவதற்கு வாய்ப்பே எழவில்லை.ஒவ்வொரு நிலையிலும், முழுமையான வெளிப்படைத்தன்மை விளக்கமாக இருந்தது, அந்த இடத்திற்குள் ஊடகங்களும் அனுமதிக்கப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்குக் குறிப்பிட்ட இடத்திலேயே தேர்வு அல்லது நிராகரிப்பு குறித்து, காரணங்களுடன் தகவல் வழங்கப்பட்டது. நாடு முழுதும் உள்ள ஊடகங்கள் எனது முயற்சியை பாராட்டின. பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் காவல் துறை பிரதிநிதிகள், சென்னையில் என்னை சந்தித்து, ஊழலற்ற தேர்வு எப்படி நடந்தது என்ற தகவலை பெற்றுச் சென்றனர்.
என்னை பற்றி இதுபோன்ற பாராட்டுக்குரிய குறிப்புகள், வெளிப்படையாகக் கூறப்பட்ட போது, ஒரு சில மூத்த அதிகாரிகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது முறைகள் குறித்து, என்னைக் கேள்வி கேட்க, அமைச்சர்கள் சிலரை அமைத்திருந்தனர்.
மிகத் தீவிரமான ஒரு கூட்டத்தில், அனைத்து வகையான கேள்விகளும் எழுப்பப்பட்ட போது, நான் அவற்றுக்குச் சோர்வில்லாமல் நிதானமாக பதிலளிக்க, முதல்வர் ஜெயலலிதா முறுவலித்து என்னை ஆதரித்தார். சட்டசபையிலும் பாராட்டினார்; பணி நீட்டிப்பையும் பெற்றேன்.இதில் மேலும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், அந்த நேரத்தில், போலீஸ் பணிக்கு தேர்வான பலரும், என்னை மனதார பாராட்டி, அவர்களின் வீடுகளில் என் படத்தை வைத்திருக்கின்றனர்.

அவர்களில் சிலர், தங்கள் ஆண் குழந்தைகளுக்கு, என் பெயரைச் சூட்டியுள்ளனர் என்றும் கேள்விப்பட்டேன். மேலும், 2021ம் ஆண்டிற்கான நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பேடுகளில், எனது புகைப்படங்களை அச்சிட்டு, அவர்களின், 25 ஆண்டு கால பணி நியமனத்தை கொண்டாடுவதற்காக, 'காக்கும் கரங்கள்' என, எழுதி வெளியிட்டு உள்ளனர்.நான் சரியானதைத் தான் செய்திருக்கிறேன். ஆனால், 1976 முதல், 1991 வரை, ஊழலற்ற மற்றும் குறுக்கீடு இல்லாத, காவலர் சேர்ப்புச் செயல் முறை தான் அவர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.
வைரக்கல்இதில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உண்மையையும், நேர்மையையும் கடுமையாக பின்பற்றியதையும் பதிவு செய்தாக வேண்டும். இந்த காவலர் சேர்ப்பு நடைமுறையில் அவருடைய ஆதரவு, அதிக அளவில் எனக்கு கிடைத்தது. நான் அவரை இன்றும் நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளில், என் பணி காலத்தில் நிகழ்ந்த இந்த தேர்வை நன்றிக் காணிக்கையாக எழுதிஉள்ளேன்.நீங்கள் மக்களுக்கு நல்லது செய்தால், நீங்கள் வெல்வீர்கள் என்பதைக் காட்டும், ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, என் வாழ்க்கை வரலாற்றில் வைரக்கல்லாக அந்த பணி காலம் அமைகிறது!தொடர்புக்கு: வி.வைகுந்த் இ.கா.ப., தமிழக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குனர் மொபைல்: 87545 08825 இ - மெயில்: v_vaikunth@lycos.com

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-பிப்-202115:09:25 IST Report Abuse
Dr. Suriya இவர் சொன்னதில் விடுபட்ட ஆண்டுகளை பாருங்கள் .... கட்டுமர ஆட்சியாக இருக்கும்.....அவ்வளவும் ஊழல்....
Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
28-பிப்-202111:39:13 IST Report Abuse
Ganapathyஅப்போ எம்ஜியார் ஆட்சியும் அப்படித்தானே . கருத்து சொல்வதற்குமுன்பு என்ன எழுதியுள்ளது என்று படிக்கவும் ,பின்னர் நீங்கள் சார்ந்த கட்சி அடிப்படையில் கருது சொல்லவும் , கண் அடைத்து கொண்டு ஜெவை தவற யாரும் யோக்கியம் அல்ல என்று பறை சாற்றவேண்டாம்...
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
24-பிப்-202108:16:27 IST Report Abuse
Modikumar வைகுந்த் சார் என்ன சொல்ல வருகிறார் என்பதை கடைசி வரை தெளிவுபடுத்தவில்லை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-பிப்-202106:19:54 IST Report Abuse
J.V. Iyer நல்ல, நேர்மையான, திறமையானவர்களை நியமியுங்கள் அய்யா, புண்ணியமா போவட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X