சென்னை:நெடுஞ்சாலை துறை, இணை தலைமை இன்ஜினியர் கார்த்திகேயினி வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார், திடீர் சோதனை நடத்தி, ஆறு ரகசிய டைரிகளை கைப்பற்றினர்.
சென்னை, நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் வசிப்பவர் கார்த்திகேயினி; நெடுஞ்சாலை துறை இணை தலைமை இன்ஜினியர்.இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, கார்த்திகேயினி வீட்டில், திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, லஞ்ச பண பரிவர்த்தனை தொடர்பாக, ஆறு டைரிகள், தங்க நகைகள் வாங்கி குவித்ததற்கான ரசீதுகள் சிக்கின. மேலும், குத்தகை ஒப்பந்தங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கார்த்திகேயினிடம் விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE