கடலுார்:தி.மு.க.,வின் தேர்தல் பணிகளை கவனித்து வரும், 'ஐபேக்' டீம், தொகுதி வாரியாக, 'சர்வே' எடுத்து, முதல் பட்டியலை தலைமையிடம் கொடுத்துள்ளது.
தொகுதிக்கு, மூன்று பேர் வீதம், வேட்பாளர் பட்டியலும் கொடுத்துள்ளது. அந்தக் குழு, தி.மு.க., வினரின் செயல்பாடுகளை, உன்னிப்பாக கண்காணிக்கிறது. கட்சி அறிவிக்கும் போராட்டங்கள், ஒப்புக்காக நடத்தப்படுகிறதா; முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்களா என, நோட்டமிடுகிறது. அதோடு, 'களை' வெட்டும் நிர்வாகிகள், கட்சியினருக்குள், 'உள்ளடி' போன்ற விவரங்களையும் சேகரித்து, தலைமைக்கு போட்டுக் கொடுக்கிறது.
இதனால், கட்சியினருக்குள் ஏற்படும், சிறு சிறு பிரச்னைகள் பற்றியும், தலைமை, கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளது. இதனால், மிரண்டுபோன கட்சியின் சீனியர்கள், தலைமை அறிவிக்கும் போராட்டங்களுக்கு, தொண்டர்கள் வரும் முன்பே ஆஜராகி விடுகின்றனர். சமீபத்தில் நடந்த, சைக்கிள் பிரசாரத்தில், வயதான நிர்வாகிகள் கூட, சைக்கிளை தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு, வீதி வலம் வந்ததை காண முடிந்தது.
வழக்கமாக, தி.மு.க.,வில் சீனியர், 'மாஜி' க்களுக்கு, தேர்தலில் கண்டிப்பாக, 'சீட்' கிடைத்து விடும். சீனியர்கள் கைகாட்டும், ஒரு சில புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். 'ஐபேக்' டீமின், போட்டுக் கொடுக்கும் நடவடிக்கையால், 'நமக்கு தான் சீட்' என, காலரை துாக்கிவிட்டு உலா வரும், 'மாஜி'க்கள் பலரும், தேர்தலில் சீட் கிடைக்குமா, நம்மை பற்றி ஏதாவது போட்டுக் கொடுத்துள்ளார்களா என்ற, அச்சத்தில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE