சென்னை:தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு, மாதம், 1,000 ரூபாய், கருணை ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், தற்போது பணியாற்றி வரும் பணியாளர்களில், பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில், உறுப்பினர் அல்லாத, 19 ஆயிரத்து, 876 பணியாளர்களுக்காக, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில், கருணை ஓய்வூதிய நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றில் இருந்து, ஓய்வு பெற்ற பின், மாதம், 1,000 ரூபாய் கருணை ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே ஓய்வு பெற்ற, 8,752 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு, கருணை ஓய்வூதியமான, 1,000 ரூபாய், அந்தந்த சங்கங்களால் வழங்கப்படும். இத்திட்டத்தால் ஆண்டுக்கு கூடுதலாக, 34.35 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு, தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், கூட்டுறவுத்துறை செயலர் தயானந்த் கட்டாரியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE