தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

ஜெ., பாணியில் ஸ்டாலின்!

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
ஜெயலலிதாவை, அ.தி.மு.க.,வினர் பின்பற்றுகிறார்களோ, இல்லையோ, ஸ்டாலின் அதில் முன்னோடியாக இருக்கிறார். அவருடைய பிரசார கூட்ட செயல்பாடுகளை, உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு இது தெரியும்.தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்ட மேடைக்கு, நேராக போகாமல், பின்புறம் தனி வழி அமைத்து, அதன் வழியாக செல்லும் பழக்கம் கொண்ட ஒரே தலைவராக இருந்தார், ஜெயலலிதா. அவர் வரும் போதும், கூட்டம் முடிந்து
ஜெ., பாணியில் ஸ்டாலின்!

ஜெயலலிதாவை, அ.தி.மு.க.,வினர் பின்பற்றுகிறார்களோ, இல்லையோ, ஸ்டாலின் அதில் முன்னோடியாக இருக்கிறார். அவருடைய பிரசார கூட்ட செயல்பாடுகளை, உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு இது தெரியும்.தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்ட மேடைக்கு, நேராக போகாமல், பின்புறம் தனி வழி அமைத்து, அதன் வழியாக செல்லும் பழக்கம் கொண்ட ஒரே தலைவராக இருந்தார், ஜெயலலிதா. அவர் வரும் போதும், கூட்டம் முடிந்து புறப்படும் போதும், அவரை வாழ்த்தி பாடல் ஒலிபரப்பாகும்.

ஜெயலலிதா அமரும் மேடையில் கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அனுமதி கிடையாது. மேடையில் இருந்து, 20 அல்லது 30 அடி துாரத்தில் இருந்து தான், மக்கள் அமர ஏற்பாடு செய்து இருப்பர். இவை அத்தனையும் இப்போது, ஸ்டாலினுக்கு நடக்கிறது. மக்கள் அமரும் பந்தலுக்குள், பத்திரிகை, 'நோட்டீஸ்' போன்ற எதற்கும் அனுமதி இல்லை.
பின்பக்க வழி இல்லாவிட்டாலும், மேடையின் அருகில் எவரும் நெருங்க முடியாமல், இரு புறமும் காவலர்கள் நிறுத்தப்படுகின்றனர்.

ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின்! ஐ பேக் ஸ்கிரிப்ட் அச்சுப் பிசகாமல் நடக்கிறது

அவர்கள் மேடை பக்கம் திரும்புவதே இல்லை. அமெரிக்க அதிபரின் சிறப்பு காவலர்களை போல, இடமும், வலமும் கழுத்தை திருப்பி கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்கள் கூட்டத்தையும் கூர்ந்து பார்த்து கொண்டு இருக்கின்றனர். கையில் பைனாகுலர் மட்டும் தான் இல்லை.


செட்டப் சீனை வெட்டிய 'ஐபேக்'



பாடல் ஒலிப்பதில் துவங்கி, மக்களிடம் மனு பெறுவது, சிலரை அழைத்து, 'மைக்' கொடுத்து பேச சொல்வது, துரத்தி வரும் எகிப்தியரிடம் தப்ப, செங்கடலை இரண்டாக பிளந்து, நடுவில் நடந்த மோசஸ் போல, கூட்டத்தின் நடுவே ஸ்டாலின் நடந்து சென்று ஆங்காங்கே, 'செல்பி' எடுப்பது, மனு பெட்டியை பூட்டி சீல் வைத்து, சாவியை சட்டைப் பாக்கெட்டில் போடுவது வரை, ஒவ்வொரு அசைவும், 'ஐ-பேக்' தயாரித்து கொடுத்த, 'ஸ்கிரிப்ட்' படி அச்சுப் பிசகாமல் நடக்கிறது.


latest tamil news




முதல் கூட்டம் முதல், தற்போது வரை ஒரே மாதிரியான நிகழ்ச்சி ஏற்பாடால், அடுத்தது என்ன என்பதை, 'ரன்னிங் கமென்டரி' போல சொல்ல முடிகிறது. ஒரு மாற்றமும் இல்லை என்பதால் எதிர்பார்ப்பு இல்லை. ஆர்வமும் அணைந்து விடுகிறது. திருப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில், 'ஐ-பேக்' டீம் 'செட் அப்' செய்து வைத்திருந்த சிறுவனை, போட்டோகிராபர்கள் மோப்பம் பிடித்து படம் எடுத்து விட்டனர். அதை அறிந்து கொண்ட, 'ஐ-பேக்' டீம், கடைசி நேரத்தில் அந்த சீனை வெட்டி விட்டு, பையனை வெளிச்சத்துக்கு கொண்டுவராமல் விட்டுவிட்டது. பாவம், அவன் என்ன ெவல்லாம் கனவு கண்டானோ...!

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
24-பிப்-202121:00:02 IST Report Abuse
RajanRajan அந்த திரிபுரசுந்தரி செட்டப்பா இருக்குமோ....
Rate this:
Cancel
goundar - coimbatore,இந்தியா
24-பிப்-202117:36:12 IST Report Abuse
goundar ஆம் உச்ச நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியுடன் அவரை ஒப்பிடவே முடியாது
Rate this:
Cancel
goundar - coimbatore,இந்தியா
24-பிப்-202117:31:34 IST Report Abuse
goundar ஆம் ஜெவுடன் ஸ்டாலினை ஒப்பிட முடியாது. ஜெ உச்ச நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X