பொது செய்தி

தமிழ்நாடு

சர்பசாந்தி நாக மண்டல பூஜை

Added : பிப் 24, 2021
Share
Advertisement
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, 'ஆஸ்லேஸ்லாபலி' என்ற சர்பசாந்தி மற்றும் நாக மண்டல பூஜை நடந்தது.ராகு மற்றும் கேதுவில் உள்ள, 86 குலங்களுக்கு பரிகார நிவர்த்தி செய்யும் வகையில், இப்பூஜை நடத்தப்பட்டது. ஜனமே ஜயன் என்ற ராஜா நாக குலத்தை அழிக்க, நாக குலத்திலுள்ள, 86 குலத்தையும் அழித்தார். அதனுடைய சாபம் தொடர்ந்து வருகிறது. அதிலிருந்து விடுபடுவதற்கும்
 சர்பசாந்தி நாக மண்டல பூஜை

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, 'ஆஸ்லேஸ்லாபலி' என்ற சர்பசாந்தி மற்றும் நாக மண்டல பூஜை நடந்தது.ராகு மற்றும் கேதுவில் உள்ள, 86 குலங்களுக்கு பரிகார நிவர்த்தி செய்யும் வகையில், இப்பூஜை நடத்தப்பட்டது. ஜனமே ஜயன் என்ற ராஜா நாக குலத்தை அழிக்க, நாக குலத்திலுள்ள, 86 குலத்தையும் அழித்தார். அதனுடைய சாபம் தொடர்ந்து வருகிறது. அதிலிருந்து விடுபடுவதற்கும் நிவர்த்தியடைவதற்கும், பக்த ஜனங்களுக்கு நன்மைகள் ஏற்படுவதற்கும், இந்த 'ஆஸ்லேஸ்லாபலி' என்ற சர்பசாந்தி பூஜை செய்யப்பட்டது.இதற்காக, 86 நாகங்களை சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் கோலங்களாக வடிவமைத்து 'சக்ரவடிவ' அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதில், 86 பிண்டங்கள், 86 நெய் அப்பங்களை வைத்து சர்பமண்டலம் ஏற்படுத்தப்பட்டது. தலைப்பகுதியை குளிர்விக்க சர்பத்தின் தலைப்பகுதியில் அரை வட்ட வடிவில், 18 எண்ணிக்கையிலான இளநீர் வைத்து அதன் மீது மங்கல திலகமிட்டு மலர்மாலைகளை சூடி வேத விற்பன்னர்கள், வேதங்களை பாராயணம் செய்து, நாகத்தின் இரு பகுதிகளிலும் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இதன் வாயிலாக, நாகசர்ப தோஷம் நீங்கி அனைவருக்கும் நற்பலன் ஏற்படும்; உலகமக்கள் நோய் நொடியின்றி வாழ்வர் என்பது இறை நம்பிக்கை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X