கோதண்டராமருக்கு மூன்றாவது முறையாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, பிப், 21ல், காலை 9:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து, நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது முதல், அன்றாடம் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் அடங்கிய சதுர்வேத பாராயணம் மற்றும் சுந்தர காண்ட பாராயணம், ருத்ரபாராயணம், சர்வமூல கிரந்த பாராயணம், நாலாயிரதிவ்யபிரபந்த பாராயணம், திருப்பல்லாண்டு ஆகியவை வேதவிற்பன்னர்களால் பாராயணம் செய்யப்பட்டது.கோதண்டராமர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வில்வலிங்கேஸ்வருக்கு பிரதோஷ காலத்தில் பக்தர்களே பாலாபிஷேகம் செய்யும் பாக்யத்தை கோவில் நிர்வாகம் வழங்கியுள்ளது. அதனால், பிரதோஷ காலத்தில் வழிபட வரும் பக்தர்கள், தங்களது கரங்களில் வில்வலிங்கேஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.நித்ய கணபதி ஹோமம்ராமர் கோவிலில் அமைந்துள்ள விநாயகருக்கு, அன்றாடம் மகாகணபதி ஹோமம் சிவாச்சாரியர்களால் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பலரும் அதிகாலை வருகை தருகின்றனர். வழிபாடு நிறைவடைந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று ஸ்ரீ மகாசுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடைபெறும்.ஸ்ரீ ராம நவமிக்கு பிரம்மோற்சவ விழாஆண்டுதோறும் ஸ்ரீ ராமநவமி விழாவில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளுவார். பத்து நாட்களும் மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சிகளும், ஆன்மிக சொற்பொழிவுகளும், ஆன்மிக நடனங்களும் நடைபெறும். இவ்விழா நாட்களில் ராம்நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனாஎஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 படித்து அரசு பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு, தேர்வு காலத்தில் ராமர் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனாவும், கூத்தனுார் சரஸ்வதி கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட சரஸ்வதி தேவியின் படமும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வு பயம் போக்குவதற்காக ஹயக்கிரீவர் ஹோமங்களும் தேர்வு காலத்தில் நடத்தப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE