சென்னை:''நல்லாட்சி வழங்கவும், நிதி ஒருங்கிணைப்பு பணியை, மீண்டும் துவக்கவும், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பட்ஜெட் உரையில், அவர் பேசியதாவது:கொரோனா தொற்று காரணமாக, மாநிலத்தின் நிதி நிலைமை, பாதிக்கப்பட்டு உள்ளதை அறிவோம். திறமையான நிதி நிர்வாகம் வழியே, நிதி நிலை பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்தி உள்ளோம்.இயல்பான வளர்ச்சி நிலை திரும்பி வருவதால், 2021 - 22ம் ஆண்டில், தானாகவே முன்னேற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கிறேன்.
கூடுதல் வருவாயை அதிகரிக்கும் வழிகளை கண்டறிதல், பெரிய பொதுத்துறை நிறு வனங் களின் இழப்புகளை கட்டுப்படுத்துதல், வளர்ச்சியை அதிகரிக்கும் செலவினங்களுக்கு, போதுமான ஆதாரங்களை கண்டறிதல் அவசியம்.மாநிலத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், வரி வருவாயின் விகிதத்தை உயர்த்த, அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கை களை, தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
நல்லாட்சியை வழங்கவும், நிதி ஒருங்கிணைப்பு பணியை மீண்டும் துவக்கவும், முதல்வர் பழனிசாமி, தலைமையிலான, ஜெ., அரசை தவிர, வேறு எவரையும், தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். இந்தப் பணியை நிறைவேற்ற, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று, நான் உறுதியாக நம்புகிறேன். ஜெயலலிதா எங்களுக்கு வழிகாட்டும் சக்தியாக இருந்து, தமிழக மக்களின் நம்பிக்கையை, தொடர்ந்து பெற, எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE