பொது செய்தி

தமிழ்நாடு

பத்தே மாதத்தில் பளிச்சிட்ட

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கோவை மக்கள் நல்வாழ்வு வாழவும், செல்வ செழிப்பு பெருகவும், கோவையில் தொழில் வளர்ச்சி சிறக்கவும், கோதண்டராமருக்கு ஐந்து நிலையில் ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதை ஏற்ற கோவில் நிர்வாகம், கடந்த 2007ம் ஆண்டு பிப்., மாதம், 53 அடி உயரத்துக்கு ஐந்து நிலைகளில், ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்து பணிகள் துவங்கி பத்தே மாதங்களில் நிறைவு

கோவை மக்கள் நல்வாழ்வு வாழவும், செல்வ செழிப்பு பெருகவும், கோவையில் தொழில் வளர்ச்சி சிறக்கவும், கோதண்டராமருக்கு ஐந்து நிலையில் ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதை ஏற்ற கோவில் நிர்வாகம், கடந்த 2007ம் ஆண்டு பிப்., மாதம், 53 அடி உயரத்துக்கு ஐந்து நிலைகளில், ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்து பணிகள் துவங்கி பத்தே மாதங்களில் நிறைவு செய்யப்பட்டன.தரை மட்டத்திலிருந்து, 19 அடிக்கு கல்காரமும், அதற்கு மேல், 33.5 அடிக்கு சுதையினால் ஐந்து நிலைகளில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் ராமாயணத்தை சித்தரிக்கும் வகையில் 40 சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, அஷ்டதிக் பாலகர்கள், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது.ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமியின் கருவறைக்கு மேல், 21 அடியில் ராமருக்கு இரண்டு தள விமானம் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் ஆஞ்சநேயர் நவகிரஹங்களுக்கென்று தனித்தனியாக கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தில் ஏழு கும்ப கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.ராமருக்கென்று உருவாக்கப்பட்டுள்ள பிரகாரத்தில், ஏழுவிதமான ராமர் சிற்பங்களும், மூன்று விதமான கிருஷ்ணர் மற்றும் விநாயகர் சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவில் முகப்பில், 26 அடி உயரத்தில் தனி மரத்தில் கொடிமரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மேற்பகுதியில் பிரபாவளி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு அவதாரமும் ஒரு நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளன.அதே போல், கோபுரத்தின் கீழ் பகுதியிலிருந்து உச்சி வரை மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் பல்வேறு சுதை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சுதை சிற்பத்தின் முதல் வரிசையில் திருவேங்கடமுடையானின் சிற்பம் முதல் வரிசையில் இடம் பெற்றுள்ளது. இச்சிற்பம் பக்தர்களின் இருகைகளையும் தலைக்கு மேலே கூப்பி வழிபாடு செய்ய வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X