சென்னை:பணி நிரந்தரம் கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை, 'லேப் டெக்னீஷியன்'கள், இரண்டாவது நாளாக, நேற்று முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்த போது, ஆயிரக்கணக்கான பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆய்வகங்களில் பணியாற்ற, லேப் டெக்னீஷியன் கள் நியமிக்கப்பட்டனர். அவர்களது பணிக்காலம், இம்மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், 'கொரோனா காலத்தில், உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம். எனவே, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, அவர்கள் கோரி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன், இரண்டாவது நாளாக அவர்கள், முற்றுகையில் ஈடுபட்டனர்.அவர்களில், நான்கு பேரை அழைத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு நடத்தினார்.
அப்போது, 'மேலும் மூன்று மாதங்களுக்கு, பணி நீட்டிப்பு செய்கிறேன்; பின், படிப்படியாக நடவடிக்கை எடுக்கிறேன்' என, அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE