ஊட்டி:கோடையை சமாளிக்க, நீலகிரி மாவட்டத்தில், 500 மெகாவாட்டுக்கு குறையாமல், மின் உற்பத்தி மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.நீலகிரியில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தில், 12 மின் நிலையங்கள் உள்ளன. தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். கடந்தாண்டில், எதிர்பார்த்த அளவு மழை பெய்தது.இந்நிலையில், கோடை காலத்தில், தேர்தல் வருவதால், மின் வினியோகத்தில், எவ்வித பாதிப்பு நேரிடாத வண்ணம் தடையின்றி மின்சாரம் வினியோகிக்க மின்வாரிய தலைமை உத்தரவிட்டுள்ளது. குந்தா மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் ரவி தலைமையில், மின் நிலையங்கள் ஆய்வு மேற்கொண்டு உற்பத்தித் திறன் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. கோடை முடியும் வரை, 500 மெகாவாட்டுக்கு குறையாமல் உற்பத்தி மேற்கொள்ள மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ஆல்துரை(பொ) கூறுகையில், ''நீலகிரி அணைகளில், 70 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மின் நிலையங்களில் கோடையில் தடையின்றி உற்பத்தி மேற்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE