குன்னுார்:நீலகிரியில், 1.50 லட்சம் ஏக்கர் அளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த, 20 ஆண்டுகளை ஒப்பிடுகையில், தற்போது தேயிலை தொழில் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் உதயபானு கூறுகையில்,''தோட்ட நிறுவனங்களில் கடந்த ஆண்டுகளில் உறைபனி காலத்தில், 3,700 ஏக்கர் முதல் 4,900 ஏக்கர் பரப்பளவில் தேயிலை செடிகள் கருகின. ஆனால், நடப்பாண்டு டிச., ஜன, பிப்., மாதங்களில் பனி குறைந்ததால், 1,200 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தேயிலை செடிகள் கருகின. தொடர் மழை பெய்ததால், கருகிய இலைகள் உதிர்ந்து துளிர்க்க துவங்கியுள்ளது. 'கிராப்' செய்து உரமிட்டால் நல்ல வளர்ச்சியை காணலாம். தேயிலை வரத்தும், தரமும் உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE