பல்லடம்:நலவாரிய இணையதளம் துவக்கியுள்ளது, கோவில் பூசாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்து அறநிலையத்துறை அமைச்சர், மற்றும் ஆணையர் ஆகியோரை தலைவர், செயலாளராக கொண்ட கிராம கோவில் பூசாரிகள் நல வாரியம், 2007ல் துவக்கப்பட்டது. இதில், பூசாரிகள் பெயர் சேர்க்கை, பதிவு புதுப்பித்தல், மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வந்தன.கடந்த, 2015க்கு பின் பூசாரிகள் நலவாரியம் பெயரளவில் கூட செயல்படவில்லை. நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என, கோவில் பூசாரிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனால், தற்போது நலவாரிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.கோவில் பூசாரிகள் நல சங்க மாநிலத் தலைவர் வாசு கூறுகையில், ''ஐந்து ஆண்டுகளாக நல வாரியம் செயல்படாததால் கல்வி உதவி, விபத்து நிவாரணம் பெறமுடியாமல் பூசாரிகள் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக சேர விரும்பும் பூசாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன. தற்போது நலவாரிய இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE