பொது செய்தி

தமிழ்நாடு

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., படிப்பு

Added : பிப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழக திறந்தநிலை பல்கலையில், தொலைநிலை கற்பித்தல் முறையில், பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலை பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொலைநிலை மற்றும் திறந்த வெளி கற்றல் முறையில், பி.எட்., படிப்பை நடத்த, தமிழக திறந்தநிலை பல்கலைக்கு, மத்திய அரசின் பல்கலை மானிய குழு ஒப்புதல் அளித்துள்ளது. தொலைநிலை கல்வி

சென்னை:தமிழக திறந்தநிலை பல்கலையில், தொலைநிலை கற்பித்தல் முறையில், பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொலைநிலை மற்றும் திறந்த வெளி கற்றல் முறையில், பி.எட்., படிப்பை நடத்த, தமிழக திறந்தநிலை பல்கலைக்கு, மத்திய அரசின் பல்கலை மானிய குழு ஒப்புதல் அளித்துள்ளது. தொலைநிலை கல்வி அமைப்பும், இதற்கு அனுமதி கொடுத்துள்ளது.பி.எட்., படிப்பை நடத்த, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,யின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.

பிப்ரவரி, மார்ச், 2021 முதல், இதற்கான கல்வி ஆண்டு துவங்குகிறது.மே, 2021 முதல், வகுப்புகள் துவங்கும். ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் தலா, 500 மாணவர்கள், இந்த படிப்பில் சேர்க்கப் படுவர். கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
24-பிப்-202104:31:59 IST Report Abuse
.Dr.A.Joseph தொலை நிலையில் படித்தவர்களின் பட்டம் regular முறைக்கு இணையானதா? TET எழுத இயலுமா என்பதனை தெளிவு படுத்த வேண்டும் . படித்தவர்களின் வாழ்க்கையில் விளையாட கூடாது,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X