கோவை:இந்திய வேளாண் மாணவர் சங்கம் மற்றும் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலை சார்பில், டில்லியில் நடந்த ஆறாவது தேசிய இளைஞர் மாநாட்டில், தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமாருக்கு, 2020ம் ஆண்டுக்கான சிறந்த துணைவேந்தர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இப்பல்கலையின், 13வது துணைவேந்தராக பொறுப்பேற்ற இவர், ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி பேராசிரியர்களையும், மாணவர்களையும் ஊக்குவித்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் நடத்திய அகில இந்திய நுழைவுத்தேர்வில், 2020ல் 589 இளநிலை, முதுநிலை மாணவர்கள் தகுதிபெற்றதும், குறிப்பிடத்தக்கது.அரசு, தனியார் உள்ளிட்ட வெளி நிதி நிறுவனங்களில் இருந்து, ஆராய்ச்சி பல்வேறு காரணங்களுக்காக, 57 கோடி ரூபாய் இதுவரை பெறப்பட்டுள்ளது. 2018ல் வெளி நிதி நிறுவனங்களில் இருந்து, 19 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டது. இதுபோன்று, பல்கலை மேம்பாடு, ஆராய்ச்சிகள் நிதி மேம்பாடு ஊக்குவிப்பு, புதிய செயல்திட்டங்கள் அடிப்படையில் சிறந்த துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டு, கவுரவிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE