வித்தியாசமான நாய்க்குட்டிஅமெரிக்காவின், ஒக்லஹோமா நகரில் உள்ள கால்நடைகள் மருத்துவமனையில், விநோதமான நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது. 'ஸ்கிப்பர்' என பெயரிடப்பட்ட அந்த நாய்க்குட்டிக்கு, ஆறு கால்கள், இரண்டு வால்கள், இரண்டு இடுப்பு பகுதிகள் உள்ளன. மோனோசெபாலஸ் டிபிகஸ் போன்ற ஒருவகை பிறவி கோளாறே இதற்கு காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாய்க்குட்டியின் புகைப்படங்கள், வலைதளங்களில் வைரலாகியுள்ளது.பெண் அதிகாரியின் துணிச்சல்மும்பையின், காட்கோபர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவர் ஏற முயன்றார். அப்போது, தடுமாறி பிளாட்பாரத்துக்கும், தண்டவாளத்துக்கும் இடையில் விழ நேர்ந்தபோது, பெண் ரயில்வே போலீஸ் அதிகாரியான, ஹேமு திரிவேதி என்பவர், பாய்ந்து சென்று அப்பெண்ணை காப்பாற்றினார். சி.சி.டி.வி.,யில் பதிவான இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பலரும் பெண் அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.பார்சல் வடிவில் கேக்இங்கிலாந்தில் வசிக்கும் நினா ஏவான்ஸ் என்ற பெண், தன் மகன் பிறந்தநாளுக்கு, வித்தியாசமான முறையில் பரிசு கொடுக்க முயன்றார். அமேசான் பார்சல் போலவே, கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார். நான்கு லேயர் கொண்ட சாக்லேட் கேக்கை, பார்சல் என நினைத்து அவரது மகன் திறக்க முயன்றபோது, ஆச்சரியமடைந்தார். பின்னர் அது கேக் என தெரிந்தவுடன் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார். பார்சல் வடிவ கேக்கின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்றுள்ளது.நுாலிழையில் தப்பிய சிறுமிஇளைஞர் ஒருவர் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருக்கிறார். அப்போது, எதிர்திசையில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுமி, கார் வேகமாக வருவதை பார்க்காமல் சாலைக்கு நடுவே ஓடி வருகிறாள். இதைக்கண்ட இளைஞர், சற்றும் யோசிக்காமல், நுாலிழையில் அந்த சிறுமியை இழுத்து, உயிரை காப்பாற்றி விடுகிறார். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞருக்கு பலரும் நெகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE