சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், 27ம் தேதி வரை நடக்க உள்ளது.
தமிழக சட்டசபையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம்,இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும், 27ம் தேதி வரை, சட்டசபை கூட்டத்தொடர் நடக்க உள்ளது.
இன்று, சட்டசபை கிடையாது. நாளை காலை, 10:00 மணிக்கு, சட்டசபை கூடும். சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கும், விருதுநகர் மாவட்ட வெடி விபத்து; உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கில் இறந்தவர்களின் மறைவுக்கும், இரங்கல் தெரிவிக்கப்படும்.
அதன்பின், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். நாளை மறுதினமும், பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். வரும், 27ம் தேதி, விவாதத்திற்கு துணை முதல்வர் பதில் அளிப்பார். அதைத் தொடர்ந்து, 2021 - 22ம் ஆண்டின் செலவினங்களுக்கான, முன்பண மானிய கோரிக்கைகள் மீது, ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்றப்படும். அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE