சென்னை:ஊர்க்காவல் படையினருக்கு, 10 நாட்கள் மட்டுமே பணி வழங்கும் அரசாணையை எதிர்த்த வழக்கில்,தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், பா.ஜ., துணைத் தலைவருமான அண்ணாமலை தாக்கல் செய்த மனு:போலீசாருக்கு உதவ ஏற்படுத்தப்பட்டது ஊர்க்காவல் படை; அவசர காலத்தின் போதும், பாதுகாப்பு பராமரிப்பின் போதும், போலீசாருக்கு, ஊர்க்காவல் படையினரின் உதவி பெரிதாக இருக்கும்.ஊர்க்காவல் படையினரை, போலீசார் மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
போலீஸ் துறையின் அங்கமாக அவர்கள் இயங்குகின்றனர். இவர்களுக்கு தினசரி அலவன்ஸ் தொகையாக, 150 ரூபாய் வழங்கப்பட்டது.அலவன்ஸ் தொகையை உயர்த்தக் கோரி, வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தினசரி, 560 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், பணி நாட்களை, ஐந்து நாட்களாக குறைத்துவிட்டனர். பின், 10 நாட்களாக உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஊர்க்காவல் படையினருக்கான பணி நாட்களை, மாதம் முழுதுமாக உயர்த்தும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்; 10 நாட்கள் என வரையறுத்ததை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, 10 வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE