சென்னை:'நோட்டரி வழக்கறிஞர்கள், தங்கள் தொழில் சான்றிதழை புதுப்பிக்க, இணைய தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
நோட்டரி வழக்கறிஞர்கள், அவர்களின் தொழில் சான்றிதழ் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை, அதன் காலக்கெடு முடியும் தேதிக்கு, ஆறு மாதத்திற்கு முன், உரிய படிவம் வாயிலாக, இணைய வழியில் சமர்பிக்க வேண்டும். இதற்காக, தமிழக அரசு சார்பில், tnnotary.tn.gov.in என்ற, இணையதளம் துவக்கப்பட்டு உள்ளது.
இந்த இணையதளத்தை, சட்ட அமைச்சர் சி.வி.சம்பத் துவக்கி வைத்தார்.எனவே, அரசால் நியமிக்கப்பட்டுள்ள, நோட்டரி வழக்கறிஞர்கள், தங்கள் தொழில் சான்றிதழ் புதுப்பித்தல், தொழிலாற்றும் இடத்தின் விரிவாக்கம், தொழில் சான்றிதழ் நகல் வழங்குவதற்கான விண்ணப்பம் மற்றும் ஆண்டு விவர அறிக்கை சமர்பித்தல் போன்றவற்றை, இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க வேண்டும்.மார்ச், 10 முதல், இணைய வழியல்லாத முறையில், விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE