சென்னை:தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால், 442 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 257 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 51 ஆயிரத்து, 301 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. அதில், சென்னையில், 148 பேர் உட்படமாநிலம் முழுதும், 442 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.இதுவரை, 1.72 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 8 லட்சத்து, 49 ஆயிரத்து, 166 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, 8.50 லட்சத்தை நெருங்கி வருகிறது. இவர்களில், நேற்று, 453 பேர் உட்பட, 8 லட்சத்து, 32 ஆயிரத்து, 620 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா தொற்றால், நேற்று ஆறு பேர் உட்பட, 12 ஆயிரத்து, 472 பேர் இறந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE