சட்டசபையில் வ.உ.சி., உள்ளிட்ட மூன்று தலைவர்கள் படம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் வ.உ.சி., உள்ளிட்ட மூன்று தலைவர்கள் படம் திறப்பு

Added : பிப் 24, 2021
Share
சென்னை:தமிழக சட்டசபையில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., உள்ளிட்ட மூன்று தலைவர்களின் படங்களை, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.தமிழக சட்டசபை கூட்ட அரங்கில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதல்வர்களான டாக்டர் ப.சுப்பராயன், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் படங்கள் திறப்பு விழா, நேற்று மாலை நடந்தது.சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். துணை
 சட்டசபையில் வ.உ.சி., உள்ளிட்ட மூன்று தலைவர்கள் படம் திறப்பு

சென்னை:தமிழக சட்டசபையில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., உள்ளிட்ட மூன்று தலைவர்களின் படங்களை, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழக சட்டசபை கூட்ட அரங்கில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதல்வர்களான டாக்டர் ப.சுப்பராயன், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் படங்கள் திறப்பு விழா, நேற்று மாலை நடந்தது.சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர் செல்வம்., முன்னிலை வகித்தார். மூன்று தலைவர்களின் படங்களையும், முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தலைவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

வ.உ.சிதம்பரனார் படத்திற்கு கீழே, கப்பலோட்டிய தமிழர்; டாக்டர் ப.சுப்பராயன் படத்திற்கு கீழே, பெருந்தன்மை, பேதமின்மை, பேராண்மை; ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் படத்திற்கு கீழே, நேர்மை, எளிமை, துாய்மை என்ற, வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, துணை சபாநாயகர் ஜெயராமன் வரவேற்றார். சட்டசபை செயலர் சீனிவாசன் நன்றி கூறினார். படத்திறப்பு விழாவில், அமைச்சர்கள், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X